திருப்பதி ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய, பாபவிநாச தீர்த்தத்தில் திருமலை நம்பிகள் நீர் எடுப்பது வழக்கம். ஒருநாள் மண்குடத்தில் நீர் சுமந்து வந்த போது, வழியில் வேடனாக தோன்றிய ஏழுமலையான், “ஐயா! தாகம் தீர தண்ணீர் தருவீரா?“ எனக் கேட்டார். நம்பியோ, “இது புனிதமானது. ஏழுமலையானுக்கு உரியது“ என சொல்லி நடந்தார். ஆனால் குடத்தின் பின்புறம் அம்பால் துளையிட்டு நீரைக் குடித்தார். நம்பிகள் மிக வருந்தினார். அப்போது அம்பால் பூமியில் துளைத்து தண்ணீ்ர் பெருகச் செய்து, ‘ஆகாச கங்கையான இதிலும் எனக்கு தீர்த்தம் எடுக்கலாம்“ என சொல்லி சுயரூபம் காட்டினார் ஏழுமலையான். ஆகாச கங்கை, பாபவிநாசம் தீர்த்தங்கள் இன்றும் உள்ளன.