பதிவு செய்த நாள்
26
அக்
2019
11:10
மடத்துக்குளம்: கோவை பேரூராதீனம் சாந்தலிங்கம் மருதாசல அடிகள், மடத்துக்குளம் அருகேயுள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வணங்கினார்.
மடத்துக்குளம் அருகேயுள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் பழமையானது. அமராவதி ஆற்றங்கரையிலுள்ள கோவிலில், லிங்கம் வடிவில் அம்மன் அருள்பாலிக்கிறார்.பல ஆண்டுகளுக்கு பின்பு, கடந்த மாதம் 15ம் தேதி காலை 5:00 மணிக்கு, கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது, மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்தநிலையில், கோவை, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் மற்றும் குமரகுருபரசாமி, முத்து சிவராம அடிகள் ஆகியோர் நேற்று காலை இக்கோவிலுக்கு வந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.பின்னர், அவர்கள் கருவறைக்குள் சென்று, திருவாசகம், தேவாரம், திருப்பாவை பாடல்கள் பாடி பூக்களால் அர்ச்சனை செய்து, கற்பூர ஆராதனை காட்டி பூஜை செய்து அம்மனை வணங்கினர். இதற்கு பின், கோவில் வளாகத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிய பின், புறப்பட்டுச்சென்றனர்.