ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மணவாளமாமுனிகள் சன்னதியில் திருநட்சத்திர உற்ஸவம் சடகோபராமானுஜ ஜீயர் தலைமையில் துவங்கியது. அலங்காரத்தில் எழுந்தருளிய மணவாளமாமுனிகள் முன்பு, கோஷ்டி மற்றும் நாலாயிர திவ்யபிரபந்த சேவாகாலமும் நடந்தது. பின்னர் மாடவீதிகள் சுற்றி வந்த மணவாமாமுனிக்கு ஆண்டாள், பெரியபெருமாள், பெரியாழ்வார் சன்னதிகளில் மங்காளாசாசனம் நடந்தது. தொடர்ந்து மணவாளமாமுனிகள் சன்னதியில் சாற்றுமுறை, தீபாராதனை நடந்தது. மாலையில் ஆடிப்பூர பந்தலில் பாண்டுரங்கன் பஜனைகுழுவின் வாய்பாட்டு, சேலம் அபர்ணா ரமஷே் குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பஜ்ரங்கதள் ஆண்டாள் கோயில் தக்கார் ரவிசந்திரன், மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக், நாட்டுப்புற பாடகர் விஜயலட்சுமி பங்கேற்றனர்.