திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். நாளை இரவு, 7:09 மணி முதல், 12ம் தேதி இரவு, 8:13 மணி வரை, ஐப்பசி மாத பவுர்ணமி திதி உள்ளது.அது, பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.