பதிவு செய்த நாள்
13
டிச
2019
05:12
நல்ல மனம் படைத்த மேஷ ராசி அன்பர்களே!
இந்த மாத தொடக்கத்தில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். இதற்கு காரணம் புதன் 8ம் இடத்தில் இருப்பதே. அவர் டிச. 21ல் தனுசு ராசிக்கு மாறுவதால் நன்மை குறையும். அதன் பிறகு அவரால் மனதில் வேதனை வரலாம். ஆனால் ஜனவரி 7ல் மகரம் ராசிக்கு இடம் மாறி நன்மை தருவார். அப்போது சகோதர வழியில் உதவி கிடைக்கும். அவர்களால் வாழ்வு செழிக்கும். சுகம் கிடைக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர்.
ராகு, குருவால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையனைத்தும் பூர்த்தி ஆகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். டிச.21 முதல் ஜன.7 வரை கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது.
பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை காண்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஜன.7க்கு பிறகு புதிய பதவி தேடி வரும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஜன.7 க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.
* வியாபாரிகள் ராகுவால் எதிரிகளின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவர்.
*அரசு பணியாளர்களுக்கு எதிர் பார்ப்பு நிறைவேறும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் வேலையில் திருப்தி காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஜன.7க்கு பிறகு சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* ஐ.டி. துறையினர் ஜன.7க்கு பிறகு முக்கிய கோரிக்கைகளை வைத்தால் பலன் கிடைக்கும்.
* மருத்துவர்களுக்கு எதிர்பாராத வகையில் வருமானம் வரும்.
* வக்கீல்களுக்கு ஜன.7 க்கு பிறகு போட்டியாளர்கள் தவறை உணர்ந்து வலிய உதவி புரிய முன்வருவர்.
* ஆசிரியர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். குரு பலத்தால் கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* கலைஞர்கள் மாத இறுதியில் சகபெண் கலைஞர்கள் மூலம் முன்னேற்றம் காண்பர்.
* விவசாயிகள் மாத இறுதியில் பாசிப்பயறு, நெல், உளுந்து மூலம் வருமானம் காண்பர்.
* கல்லூரி மாணவர்களுக்கு குரு சாதகமான நிலையில் இருப்பதால் தேர்வில் மதிப்பெண் உயரும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் சிலர் டிச.21 முதல் ஜன.7 வரை தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர்.
* வியாபாரிகள் மாத மத்தியில் புதனால் தடைகளைச் சந்திப்பர். அப்போது எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்,
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச.21 முதல் ஜன.7 வரை மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* மருத்துவர்களுக்கு மாத மத்தியில் வீண்அலைச்சல் ஏற்படும்.
* போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் பணிச்சுமையால் உடல்நலக்குறை வுக்கு ஆளாவர்.
* அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைப்பது சந்தேகம். மனக்குழப்பம் ஏற்படலாம்.
* சமூக நல சேவகர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அவப்பெயரும் உருவாகலாம்.
* கலைஞர்கள் எதிரி தொல்லைக்கு ஆளாவர். மறைமுகப் போட்டிகள் அதிகம் இருக்கும்.
* விவசாயிகளுக்கு டிச.21 முதல் ஜன.7 வரை கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.
* பள்ளி மாணவர்கள் சிலர் டிச.21 முதல் ஜன.7 வரை கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம்.
--------------
* நல்ல நாள்:
டிச.19,20,21, 22,23,28,29,30,31, ஜன.1,4,5,6,9,10
* கவன நாள் டிச.24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: வெள்ளை, நீலம்
பரிகாரம்
● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் விளக்கு
● ஞாயிறு காலையில் நீராடி சூரிய வழிபாடு
● வெள்ளியன்று மாலையில் லட்சுமி தரிசனம்