Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பணப் புழக்கம் அதிகரிக்கும் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அந்தஸ்து உயரும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அந்தஸ்து உயரும்

பதிவு செய்த நாள்

13 டிச
2019
05:12

பிறரைக் குறை கூற விரும்பாத கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் விருச்சிகத்தில் இருந்து தனுசுவிற்கு வந்தாலும் நன்மை  தருவார். புதன் ஜன.7 வரை நற்பலன் கொடுப்பார். மேலும் குரு, சனி, கேது மாதம்  முழுவதும் நன்மை கொடுப்பர்.  பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி  அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். கேதுவால் முயற்சியில்  வெற்றி கிடைக்கும்.

சூரியனால் சமூக அந்தஸ்து உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். எந்த  ஒரு செயலையும் தடையின்றி கச்சிதமாக முடிப்பீர்கள். கையில் பணப்புழக்கம்  அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

மகிழ்ச்சி அதிகரிக்கும்.கணவன், மனைவி இடையே அன்பு கூடும். பெண்களின்  ஆதரவு இருக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். டிச.28க்கு பிறகு  செவ்வாயால் அண்டை வீட்டார் தொல்லை ஏற்படலாம். சிலரது வீட்டில்  பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.
பெண்கள் மகிழ்ச்சியுடன் செயல்படுவர். குடும்ப முடிவுகளில் உங்கள் கை ஓங்கி  நிற்கும். இளைய சகோதரர் வகையில் பண உதவி கிடைக்கும். பிள்ளைகள்  நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடி தருவர். உறவினர் உதவிகரமாக இருப்பர்.  புரிந்து கொள்ளாதவர்கள்  கூட தங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். சுயதொழில் புரியும் பெண்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். சிலருக்கு புதிய  பதவி தேடி வரும். உடல் நிலை திருப்தியளிக்கும்.  மருத்துவச் செலவு குறையும். டிச.28க்கு பிறகு உஷ்ணம், தோல் தொடர்பான பிரச்னை ஏற்படலாம்.   

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவுடன் முன்னேற்றப்பாதையில்  வெற்றிநடை போடுவர்.
* வியாபாரிகள் சக வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் வளர்ச்சி காண்பர். கோரிக்கைகள் எளிதாக  நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். எதிர்பார்த்த  கடனுதவி எளிதில் கிடைக்கும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். பதவி,  சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.  சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
* போலீஸ், ராணுவத்தினர் குறுக்கிடும் தடைகளை எளிதில் முறியடிப்பர்.
* மருத்துவர்கள் நல்ல வருமானத்தை பெறலாம். செல்வாக்கு அதிகரிக்கும்.  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர்.
* வக்கீல்கள் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். பணியிடத்தில் அதிகாரம்  கொடி கட்டி பறக்கும்.
* ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.  சக ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர்.
* அரசியல்வாதிகளுக்கு நன்மை தொடர்ந்து கிடைக்கும். இதனால் மனதில்  உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.  பணப்புழக்கம் அதிகரிக்கும்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் காண்பர். பொதுமக்கள் மத்தில்  நற்பெயர் கிடைக்கும்.
* விவசாயிகள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறுவர். நெல்,  கோதுமை, சோளம், பாசி பயறு, மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் வருமானம்  காண்பர்.
* பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வர்.  தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி  காண்பர்.

சுமாரான பலன்கள்:

* தொழிலதிபர்கள் சக தொழிலதிபர்களின் எதிர்ப்புக்கு ஆளாகலாம்.
* வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தற்காலிகமாக தவிர்க்கவும்.
* ஐ.டி., துறையினருக்கு மனதில் இனம் புரியாத வேதனை குடி கொண்டு  இருக்கும். அடிக்கடி குழப்பம் ஏற்படலாம்.
* கலைஞர்களுக்கு எதிரி தொல்லை உருவாகும். மறைமுகப்போட்டி  அதிகரிக்கும்.
* விவசாயிகள் பால்பண்ணை தொழிலில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது.

* நல்ல நாள்:
டிச.17,18, 24,25,26,27,30,31 ஜன.1,4,5,6,11,12, 13,14

* கவன நாள்: டிச.19,20 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7
* நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்:
●  செவ்வாய் கிழமையில் முருகனுக்கு நெய் தீபம்
●  வெள்ளியன்று அம்மனுக்கு குங்கும அர்ச்சனை
●  பிரதோஷத்தன்று நந்திக்கு பால் அபிஷேகம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar