Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பெண்களால் நன்மை கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அரசின் சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2020
17:43

மீன ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட கூடுதல் பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் நட்புக் கிரகமான சூரியன் 11ம் இடத்தில் இருக்கிறார். இது மிக சிறப்பான நிலை. புதன் ஜன.22 வரையும், சுக்கிரன் பிப்.4க்கு பிறகும் நற்பலனைக் கொடுப்பர். இதனால் எந்த செயலையும் துரிதமாக செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்தபந்தம் வருகையால் மகிழ்ச்சி காண்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பிப்.4 க்கு பிறகு பெண்களின் ஆதரவு கிடைக்கும். நற்சுகம் கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  
பெண்கள் குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் ஆதரவுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். ஜன.22க்கு பிறகு பொறுமையை கடைபிடிக்கவும். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும், பளுவும் அதிகரிக்கும். பொறுமையும் நிதானமும் தேவை. பிப்.9க்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் களவு போகலாம் கவனம். உடல்நிலை திருப்தியளிக்கும். பிப்.9க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.  பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த பிரச்னை பிப்.4க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக இருப்பர். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
* வியாபாரிகள் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவர். வீண்விரயம் மறையும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் புதிய தெம்புடன் காணப்படுவர்.  கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.  
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு ஜன. 22 வரை அனுகூல பலன் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் தடை நீங்கி பதவி உயர்வு பெறுவர்.
* அரசியல்வாதிகள் பிப்.4க்கு பிறகு சிறப்பான நிலையில் இருப்பர். பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
* விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை பின்பற்றி முன்னேற்றம் காண்பர்.

சுமாரான பலன்கள்

* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஜன.22க்கு பிறகு முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* மருத்துவர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். பொறுமையும்,  நிதானமும் தேவை
* ஆசிரியர்களுக்கு குருவால் மன வேதனை, நிலையற்ற தன்மை ஏற்படலாம். வீண் விரோதம் குறுக்கிடலாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
* தரகு, கமிஷன் தொழிலில் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. எதிரிகள் வகையில் விழிப்பாக இருப்பது நல்லது.
* ஐ.டி., துறையினர் சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.
* கலைஞர்களுக்கு பிப்.4 வரை கடின முயற்சி தேவைப்படும். புதிய ஒப்பந்தம் பெறுவதில் போட்டிகள் அதிகரிக்கும்.
* விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகலாம். சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும் வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.  * மாணவர்கள் ஜன.22க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

பரிகாரம்:
* வியாழனன்று  குருபகவானுக்கு அர்ச்சனை
* பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு

* நல்ல நாள்:  ஜன.15,16,17,22,23,24,25,26,29,30,31, பிப்.3,4,5,10,11,12
* கவன நாள்: ஜன.18,19 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9  
* நிறம்: சிவப்பு, பச்சை

 
மேலும் தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை) »
temple
மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்து சாதகமான பலன் தர உள்ளார். அதே ... மேலும்
 
temple
ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் ஜன.22க்கு பிறகும் சுக்கிரன் பிப்.9க்கு பிறகும் சாதகமான ... மேலும்
 
temple
மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் ஜன.22 வரையும், சுக்கிரன் பிப்.4 வரையும், செவ்வாய் பிப்.9 வரையும் ... மேலும்
 
temple
கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மை காண்பீர்கள். காரணம் புதன் ஜன.22க்கு பிறகும், ... மேலும்
 
temple
சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன், குரு, ராகுவால் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்கிரனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.