Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அரசின்  சலுகை மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: பொன் பொருள் சேரும் ரிஷபம்: பொன் பொருள் சேரும்
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
மேஷம்: தொட்டது துலங்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2020
13:20

நட்புக்கு இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். குருபகவான் மார்ச் 27 வரை சாதகமான நிலையில் இருந்து நற்பலன் தருவார். அதன் பிறகு அவர் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு செல்கிறார். இது சுமாரான இடம் தான். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். சூரியனும், ஏப்.1ல் புதனும் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் பாதிப்பு ஏற்படாது.

குடும்பத்தில் புதனால் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். சுக்கிரனால் உற்சாகம் பிறக்கும். தொட்டது அனைத்தும் துலங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பெண்கள்  உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்த விரும்புவோர் மார்ச் 27க்குள் நடத்தவும்.

பெண்களுக்கு கணவர், குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். சகோதரிகள் அனுசரணையுடன் இருப்பர். குருபகவானால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உறவினர் மத்தியில் நற்பெயர் உண்டாகும். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீ்ரகள். சகோதரர் வழியில் பண உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். கடந்த காலத்தில் இருந்த வேலைப்பளு மறையும். மார்ச் 23க்கு பிறகு அண்டை வீட்டாரால் தொல்லை ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு கவனம். மார்ச் 28க்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் உண்டாகும்.
பயணத்தின் போது கவனம் தேவை. மார்ச் 23க்கு பிறகு உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களை பொறுத்தவரையில், பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களின் வசம் ஒப்படையுங்கள். மார்ச் 28க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும்.
* வியாபாரிகளுக்கு ராகுவால் பிரச்னைகளை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். பகைவர்களின் சதியை முறியடிப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மார்ச் 28க்கு பிறகு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நன்மை அதிகரிக்கும். மேலதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சம்பள உயர்வு கிடைக்க பெறுவர். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை ஏப்.1 க்குள் கேட்டு பெறவும்.
* ஐ.டி., துறையினர் சந்தித்த பிரச்னை அனைத்தையும் புதன் நிவர்த்தி செய்வார். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்
* மருத்துவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
* வக்கீல்கள் திறம்பட வாதாடி புகழ் பெறுவர். வழக்குகளில் மார்ச் 27க்குள் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் தடைகளை முறியடித்து வெற்றி காண்பர். பதவி உயர்வும் கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சகபெண் கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர். மார்ச் 28க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
 * விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. நெல், மஞ்சள், கிழங்கு வகைகள், பாசிப்பயறு, உளுந்து, கொள்ளு, கொண்டைக்கடலை  போன்றவை மூலம் வருமானம் உயரும்.  கால்நடைகள் வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும்.
 * பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் வளர்ச்சி ஏற்படும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

சுமாரான பலன்கள்
* தனியார் துறையில் பணியாளர்கள் ஏப்.1 க்கு பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.    
* வக்கீல்கள் ஏப்.1க்கு பிறகு அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். சிலருக்கு மாற்றம் கிடைக்கலாம்.
*  தரகு, கமிஷன் தொழிலில் பொருள் விரயம் ஏற்படலாம். வீண் செலவை குறைக்கவும். அறிமுகம் இல்லாத யாரையும் நம்ப வேண்டாம்.  
* அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஏப்.1க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. சிலர் மன உளைச்சலுடன் காணப்படுவர்.

நல்ல நாள் மார்ச் 14,19,20,21,22,23,26,27,28,31 ஏப்.1,7,8,9,10
கவன நாள்: மார்ச் 15,16 ஏப்.11,12 சந்திராஷ்டமம்
திர்ஷ்ட எண்: 4,5 நிறம்: வெள்ளை, நீலம்.

பரிகாரம்:
* வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை
* தினமும் காலையில் நீராடி சூரிய வழிபாடு

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.