பாம்பன் சுவாமிகளின் இஷ்ட தெய்வம் முருகன். ஒருமுறை யாத்திரையாக காஞ்சிபுரம் அவர் வந்த போது, கோயில்களை எல்லாம் தரிசித்து விட்டு குமரக்கோட்டத்தை தரிசிக்காமல் கிளம்பினார். அப்போது சிறுவன் ஒருவன், ‘சுவாமி! குமரகோட்டத்தை தரிசிக்கவில்லையா?’ எனக் கேட்டான். ‘எங்கிருக்கிறது என தெரியாதே; ரயிலுக்கும் நேரமாச்சு’ என்றார்.‘ நீங்கள் தரிசித்து வரும் வரை ரயில் வராது’ என்றான் சிறுவன். அதை நம்பி அவனைப் பின்தொடர்ந்து குமரகோட்டத்து முருகனை தரிசித்தார். அதன்பின் அவனைக் காணவில்லை. முருகப்பெருமானே சிறுவனாக வந்ததை உணர்ந்து நெகிழ்ந்தார். பின்னர் ரயிலும் தாமதமாக வரவே முருகனின் அருளை வியந்தபடி யாத்திரையை தொடர்ந்தார்.