குழந்தைகளின் மீது முருகனுக்கு பிரியம் அதிகம் என்பதால் தான் அவர் குழந்தையாக போது பல திருவிளையாடல்களை நிகழ்த்தினார். உதாரணமாக கனிக்காக உலகம் சுற்றியது, பிரம்மனை சிறையிட்டது, தந்தைக்கு உபதேசித்தது போன்றவை. குழந்தை தெய்வமான முருகனை வழிபட்டால் பாலாரிஷ்டம் என்னும் தோஷம் விலகும். இது குழந்தைகளுக்கு ஜாதகரீதியாக ஆயுள், ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும். இதற்காக குழந்தைகளை முருகனின் சன்னதியில் தத்து கொடுத்து வாங்கும் வழக்கம் இருக்கிறது.
குழந்தைகளைக் கண்ணியம் இன்றி திட்டுவோரை முருகன் ஏற்க மாட்டார். ஏனெனில் வீட்டில் கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் சூட்சும வடிவில் இருப்பர். அவர்கள் நாம் சொல்வதை அப்படியே செய்ய அருள்புரிவர். ‘படிக்காட்டி உருப்படமாட்டே’ என திட்டினால் அது அப்படியே நடக்கும். இதற்குப் பதிலாக ‘நன்றாகப் படித்தால் தான் முன்னேறுவாய்’ என கண்ணியமாக பெற்றோர் சொல்ல வேண்டும். அப்போது ‘ததாஸ்து’ (அப்படியே ஆகட்டும்) என்பர்.