தியாகதுருகம்: ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ராவுத்தநல்லூரில் நூற்றாண்டு பழமையான சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மூலவர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். துளசி, வெற்றிலை, மற்றும் 1008 வடை மாலை சாற்றி ஆராதனைகள் நடந்தது. மகா தீபாராதனையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.