லட்சுமியுடன் அருள்பெற்ற குபேரனை அவருக்குரிய வியாழக்கிழமையும், பூசநட்சத்திரம் கூடிய நாளில் வழிபடுவது சிறப்பு. அந்த நாளில் அஷ்டமி, நவமி திதி இருப்பது கூடாது. நாள் முழுவதும் அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் அமைய வேண்டும். இவரை வழிபடும் வீட்டில் கடன் பிரச்னை தீரும். பழைய பொருட்களை வாங்கும் சூழ்நிலை ஏற்படாது. தண்ணீர் கஷ்டம் அகலும். சத்துள்ள சுவை மிக்க உணவுகள் கிடைக்கும். சமூகத்தில் கவுரமான வாழ்வு அமையும்.