சித்தத்தை (மனதை) சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். எண்ணம், சொல், செயலால் ‘சிவனே’ என பக்தியில் ஆழ்ந்திருப்பர். மனைவி, மக்கள் என்னும் குடும்பப் பிணைப்புக்குள் சிக்காதவர்கள். ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என மனதில் பட்டதைச் சொல்லும் துணிவு கொண்டவர்கள். ‘‘உள்ளத்தில் கடவுள் இருக்கும் போது, சிலை வடிவில் அவனைத் தேடுவது அறிவீனம்’ என்பது சித்தர்களின் முடிவு.