Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: எதிர்பாராத வருமானம் சிம்மம்: எதிர்பாராத வருமானம் துலாம்:  குடும்பத்தில் மகிழ்ச்சி துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
கன்னி: பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2020
17:18

இந்த மாதத்தை பொறுத்தவரை ரிஷபத்தில் இருக்கும் புதன் மே 24ல் மிதுனத்திற்கு மாறி நற்பலனை தருவார்.  சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து 9ம் இடத்திற்கு மாறி  நற்பலன் கொடுப்பார். தற்போது மகர ராசியில் இருக்கும் குருவும், கும்ப ராசியில் இருக்கும் செவ்வாயும்  தொடர்ந்து நற்பலன் தருவர். இதனால்  எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி காண்பீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருப்பதால் பல்வேறு தடைகள் வரலாம். ஆனால் அவரின் 3ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் அவற்றை சமாளித்து ஈடுகட்டும் வகையில் நற்பலன் கிடைக்கும். சூரியனால் மதிப்பு மரியாதை உயரும்.  வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

குருபகவான் 4ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மே 24க்கு பிறகு கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சச்சரவுகள், பிணக்குகள் அடியோடு மறையும். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.பெண்கள் வகையில் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். ஜுன் 4க்கு பிறகு சுக்கிரனால் பெண்களால் நன்மை கிடைக்கும். ஆடம்பர வசதி பெருகும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.  பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். மே 24க்கு பிறகு  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும். சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். உடல்நிலை அவ்வப்போது அதிருப்தியளிக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். சக தொழிலதிபர்கள் வகையில் இருந்த மறைமுகப்போட்டி  மே 24க்கு பிறகு மறையும். அதன்பின் அவர்கள் தவறை உணர்ந்து உதவ முன்வருவர்.  
* வியாபாரிகளுக்கு மே 24க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள்.  வசதி வாய்ப்புகள் பெருகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.
* தரகு, கமிஷன் தொழில்புரிவோர்  ஜுன் 4 க்கு பிறகு எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்க பெறுவர்.
* அரசு பணியாளர்கள் சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம், பதவி மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.
* தனியார் துறையில் பணியாளர்கள் தீயோர் சேர்க்கையால்  இருந்து மே 24க்கு பிறகு விடுபடுவர். அதன்பின் சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* ஐ.டி., துறையினருக்கு ஜுன் 4க்கு பிறகு புதிய பதவி தேடி வரும் மேலதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். கோரிக்கைகள் நிறைவேறும்.
* மருத்துவர்கள் மே 24க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி காண்பர். வேலைப்பளு குறையும்.
* ஆசிரியர்கள் வேலையில் நிம்மதியும் திருப்தியும் பெறுவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தினர் உன்னத பலனை எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலையின்றி இருக்கும். படித்தவர்களுக்கு  அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
* அரசியல்வாதிகள் பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பர்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். சிலருக்கு எதிர்பாராமல் பதவி கிடைக்கும்.
* கலைஞர்களு்்்க்கு ஜுன் 4-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு, புகழ் தானாக வரும்.
* விவசாயிகள் தேவையான மகசூலைப் பெறலாம். மஞ்சள், கேழ்வரகு, சோளம் பயறு வகைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் வண்ணம் நிறைவேறும். மே 24க்கு பிறகு கால்நடைச் செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மே 24க்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடை கொடுப்பர்.

சுமாரான பலன்கள்
* தனியார் துறை பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும் வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
* வக்கீல்கள் பிரதிபல எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் மே 24க்கு பிறகு பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

நல்ல நாள்: மே 15,16,17,18,19,25,26,27,28,31 ஜுன் 1,5,6,11,12,13,14
கவன நாள்: மே20,21 சந்திராஷ்டமம்  
அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: மஞ்சள், சிவப்பு.

பரிகாரம்:
* பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் தீபம்
* ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.