Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மலைக்குத் திரும்பிய அழகர்: மலர் தூவி ... பராமரிப்பின் பாழ்படும் சமணர் படுகைகள்! பராமரிப்பின் பாழ்படும் சமணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 மே
2012
10:05

தேனி:வீரபாண்டி திருவிழாவில் இன்று தேரோட்டம் நடக்கிறது. வீரபாண்டி கவுமாரியம்மன் விழா கடந்த ஏப்., 17ல் கம்பம் கொண்டு வரும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஏப்., 18ல் கம்பம் நடப்பட்டது. கடந்த மே 8ல் அம்மன் மலர் விமானத்தில் ஊருக்குள் இருந்து திருக்கோயிலுக்குள் பவனி வந்தார். அன்று முதல் திருவிழா தொடங்கியது. 24 மணி நேரமும் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அம்மனை வழிபட்டு வந்தனர். மே 9ம் தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் பவனி வந்தார். மே 10ல் (நேற்று) புஷ்ப பல்லக்கில் வலம் வந்தார். இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. தேர் நான்கு ரதவீதிகளின் வழியாக உலா வரும். மே 14ல் தேர் மீண்டும் நிலைக்கு வரும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தல வரலாறு: ஆதிகாலத்தில் ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் இன்றைய தலம் இருக்கும் அடர்ந்த வனத்தில் தவமியற்றினார். அசுரன் கௌமாரியை தூக்கிச் செல்ல முயன்றான். இதனை அறிந்த கௌமாரி, பக்கத்தில் இருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீச, அது அசுரனை இரு கூறாக பிரித்து அழித்தார். அப்போது தேவர்கள் மலர்மாறி தூவ கௌமாரி இங்கேயே கன்னித்தெய்வமானார். அவர் வழிபட்ட சிவலிங்கத்திற்கு திருக்கண்ணீஸ்வரர் என பெயர் இட்டார்.

வீரபாண்டிய மன்னன் மதுரையில் ஆட்சி நடத்திய போது, ஊழ்வினையால் இரண்டு கண்களும் ஒளி இழக்க நேரிட்டது. மன்னன் இறைவனை வேண்டினான். இறைவனும் மன்னன் கனவில் தோன்றி, இன்றைய வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, நீ வைகை கரை ஓரமாக சென்று, நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரி தவமியற்றுகிறாள். அங்கு சென்று அவளை வணங்கு. உன் கண்கள் இருள் நீங்கி ஒளி பெரும் என்றார். அதேபோல் கௌமாரியை வணங்கிய வீரபாண்டிய மன்னர் ஒரு கண்ணையும், கௌமாரி கட்டளைப்படி திருக்கண்ணீஸ்வரமுடையாரை வணங்கிய மன்னன் மறு கண்ணையும் பெற்றார். பார்வை பெற்ற மன்னன் கண்ணீஸ்வரருக்கு கற்கோயில் அமைத்து வழிபாடு செய்தான். அதுவே வீரபாண்டி என அழைக்கப்பெற்றது. பிற்காலத்தில் வீரபாண்டியை தலைமையிடமாக கொண்டு வீரபாண்டிய மன்னனின் பேரன் ராஜசிங்கன் வீரபாண்டி வட்டத்தை ஆட்சி நடத்தினார். அப்போது முதல் கண்நோய் கண்டவர்கள், அம்மை நோய் கண்டவர்கள், தீராத நோய் கண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் அம்மனை தரிசித்து தீர்த்தமும், அருளும் பெற்று விமோசனம் அடைகின்றனர். இந்த கோயில் முன் கருப்பணசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இதுவே இக்கோயிலுக்கு காவல் தெய்வமாக உள்ளது. காவல் தெய்வத்தை கடந்து முன்மண்டபம், அதனை அடுத்து கம்பந்தடி மண்டபம் அமைந்துள்ளது. இந்த கம்பந்தடி மண்டபத்தில் தான் சித்திரை திருவிழா கம்பம் நடப்படுகிறது. கம்பந்தடி மண்டபத்தை கடந்து மகாமண்டபம் அமைந்துள்ளது. கடந்து முன் செல்லும் கருவறையில் கௌமாரி கன்னி தெய்வமாக காட்சியளிக்கிறார்.

சித்திரை திருவிழா: தேனி மாவட்டத்தில் நடக்கும் திருவிழாக்களிலேயே மிகவும் பெரிய சித்திரை திருவிழா இது தான். தீராத நோய் தீர்க்கும் அற்புதசக்யாகவே அம்மனை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இதனால் நோய் கண்டவுடன் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர். நோய் குணமாகிய உடன் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். விழாக்காலங்களில் அம்மன் தினமும் ஒரு பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மன் முத்துப்பல்லக்கிலும், பூ பல்லக்கிலும் பவனி வருவார். கோயில் தீர்த்தமாக கோயில் அருகில் உள்ள கிணற்று நீரையும், கண்ணீஸ்வரமுடையார் தீர்த்தமாக முல்லை ஆற்று நீரையும் பயன்படுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar