பதிவு செய்த நாள்
15
ஆக
2020
11:08
வெள்ளை மனம் படைத்த மிதுன ராசி அன்பர்களே!
சூரியன், செவ்வாய்,குரு, சுக்கிரன் ஆகியோர் மாதம் முழுவதும் சாதகமாக நின்று நற்பலன் கொடுப்பர். ஆக.30 முதல் புதன் நன்மை தருவார். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எந்த செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.
ராகு செப்.1ல் 12-ம் இடமான ரிஷபத்திற்கு செல்கிறார். இங்கு அவர் பொருள் விரயம், துார தேச பயணத்தைக் கொடுப்பார். கேது செப்.1ல் நன்மை தரும் இடத்திற்கு வருகிறார். அவர் 6-ம் இடமான விருச்சிகத்திற்கு வருவதன் மூலம் பின்தங்கிய நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக 30க்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும்.சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். பிறந்த வீட்டில் இருந்து பொருள் கிடைக்க பெறலாம். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக முன்னேற்றம் காண்பர். ராகுவால் இருந்த பிரச்னை, உறவினர் கருத்துவேறுபாடு முதலியன ஆக.31க்கு பிறகு மறையும்.உடல் நலம் சிறப்பாக இருக்கும். கண்நோய் பூரண குணம் அடையும்.மருத்துவ செலவு குறையும்.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு சூரியன் பலத்தால் இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். லாபம் சிறப்பாக இருக்கும்.
* வியாபாரிகளுக்கு பகைவர் தொல்லை, அரசு பிரச்னை, மறைமுகப்போட்டி முதலியன ஆக.29க்கு பிறகு மறையும். தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் கூடுதல் வருமானம் காண்பர்.
* தரகு, கமிஷன் தொழிலில் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்குக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஆக.31க்கு பிறகு மறையும். அதன்பின் பணவரவு இருக்கும்.
* அரசு பணியாளர்களுக்கு ஆக.30க்கு பிறகு தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். பதவிஉயர்வு கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பபர்.
* ஐ.டி., துறையினர் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
* மருத்துவர்கள் ஆக.29 க்கு பிறகு முன்னேற்றத்தைக் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு ஆக.29க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் தகுந்த நேரத்தில் உதவ முன்வருவர்.
* அரசியல்வாதிகளின் வாழ்வில் வசந்தம் பிறக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் நெல்,கேழ்வரகு, பாசி பயறு , கொள்ளு, துவரை, கொண்டைக்கடலை, மஞ்சள், தக்காளி,பழ வகைகள், காய்கறி வகைகள் மூலம் அதிக வருமானம் காண்பர். வழக்கு, விவகாரங்கள் சீரான நிலையில் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
* பண்ணை தொழிலில் ஆக. 29க்கு பிறகு கால்நடை வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
* மாணவர்கள் குருவால் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு சனி பகவானால் அலைச்சல் அதிகரிக்கும் சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுற நேரிடலாம்.
* வியாபாரம் மாத முற்பகுதியில் அரசு வகையில் பிரச்னையை சந்திக்கலாம். வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
நல்ல நாள்: ஆக.19,20,26,27,28,29 செப். 4,5,6,7,8,11,12,16
கவன நாள்: ஆக.30,31 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 1,5,7 நிறம்: சிவப்பு,மஞ்சள்
பரிகாரம்:
* வெள்ளியன்று நாகதேவதை வழிபாடு
* சதுர்த்தியன்று விநாயகருக்கு விளக்கு
* பவுர்ணமியன்று விரதமிருந்து கிரிவலம்