Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மீனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி மீனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி ரிஷபம் :ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் ரிஷபம் :ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை)
மேஷம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2020
07:02

அசுவனி :     ராசிநாதன் செவ்வாய் வக்ர கதியில் இருந்தாலும் உங்கள் ராசியிலேயே ஆட்சி பலம் பெறுவதாலும் உங்கள் நட்சத்திரக் காலில் சஞ்சரிப்பதாலும் மன உறுதியுடன் செயல்பட்டு வருவீர்கள். செயல்களில் வேகம் அதிகரிக்கும். செவ்வாயின் ஆட்சி பலம் அவசரத்தன்மையைக் கூட்டும். இருந்தாலும் வக்ரம் பெற்றிருப்பதால் செயல் வெற்றி தாமதமாகும். நிதானம் தேவை. பேச்சில் வெளிப்படும் கருத்துக்கள் மற்றவர் மனதை புண்படுத்தக்கூடும். வார்த்தை உபயோகிப்பதில் அதிக கவனம் கொள்ளுங்கள். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டானாலும் நவ.4 முதல் சுமூகமாகச் செல்வீர்கள். பங்காளிகளுடனான சொத்துப் பிரச்னைக நவம்பர் மாத முதல் வாரத்தில் முடிவிற்கு வரும். சொந்தவீடு வாங்கும் முயற்சியில் உள்ளவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் பாடங்கள் புரியாமல் சற்று தடுமாற்றத்திற்கு ஆளாகலாம். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. பெண்கள் நரம்பு பலவீனம் காரணமாக  சிரமப்பட நேரிடும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். ஆன்மிகம் சார்ந்த செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். பணியாளர்கள் உடன்பணிபுரியும் நபர்களால் துரோகத்தைச் சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்வோர், வியாபாரிகள் கடுமையான அலைச்சலை சந்திப்பர். எதிர்பார்க்கும் வருமானம் வந்து சேர பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியம். இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கமின்றி அவதிப்படுவதால் பகலில் அவ்வப்போது துாங்கி வழிய நேரிடும். இதனால் பல வேலைகளைச் செய்து முடிக்க இயலாமல் அவதிப்படுவீர்கள். எதிலும் அவரசப்படாமல் நிதானத்தை கடைபிடித்தால் இந்த மாதத்தில் எதிர்கொள்ள இருக்கும் பிரச்னைகளை சமாளித்து வெற்றி காணலாம்.


பரிகாரம் : தினமும் காலையில் எழுந்ததும்  மூன்று ஆத்ம பிரதட்சிணம் (தன்னைத்தானே சுற்றுதல்) செய்து பூமாதேவியை (தரையை) தொட்டு விழுந்து வணங்கி பணிகளைத் தொடங்க வெற்றி கிடைக்கும்.

பரணி :    அக்டோபர் மாதம் 23 வரை சுகமான சூழலைக் காணும் நீங்கள் அதன் பிறகு சற்று போராட்டமான சூழலைக் காண நேரிடும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதால் மரியாதைக் குறைவான சம்பவம் நிகழலாம். வீண் விவகாரங்களால் அவதிப்படும் வாய்ப்புண்டு என்பதால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையற்ற பிரச்னைகளில் மாட்டிக் கொள்வீர்கள். அக்டோபர் இறுதி வாரத்தில் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் சுயபரிசோதனை செய்வது நல்லது. குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற கூடுதலாக செலவழிப்பீர்கள். உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். சொந்தமாக வீடு வாங்க முயற்சிப்போருக்கு எதிர்பார்க்கும் வசதிகளோடு வீடு அல்லது மனை அமைவதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் நண்பர்களின் துணையுடன் பாடங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். பிள்ளைகளின் வழியில் மனதிற்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் அரங்கேறும். கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையோடு இணைந்து சேமிப்பில் ஈடுபடுவது எதிர்காலத்திற்கு உபயோகமாக அமையும். நெருங்கிய உறவினர் ஒருவர் உதவி கேட்டு அதனை மறுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். இதனால் கருத்துவேறுபாடு உருவாகக் கூடும். தான தருமங்களில் ஈடுபாடு தோன்றும். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதில் வந்து போகும். பணியாளர்கள் அலுவலகத்தில் கலகலப்பான சூழலை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பர். சுயதொழில் செய்வோர், வியாபாரிகள் தங்கள் முகராசியின் மூலம் வாடிக்கையாளர்களை கவர்வதில் வெற்றி காண்பர். தனலாபம் சீராக வந்து கொண்டிருக்கும். கனவுத்தொல்லையால் இரவு உறக்கம் கெடலாம். மனதினை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் இந்த மாதம் மட்டுமல்ல எப்பொழுதும் வெற்றித் திருமகள் உங்களிடம் குடியிருப்பாள்.


பரிகாரம் : வெள்ளிதோறும்  அருகிலுள்ள அம்மன் கோயிலில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.


கார்த்திகை 1ம் பாதம் : இந்த மாதத்தில் நண்பர்களின் துணையோடு பல விஷயங்களை சாதிப்பீர்கள். நெடுநாட்களாக நிலுவையில் உள்ள பணிகளைச் செய்து முடிக்க கால நேரம் சாதகமாக அமையும். அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செயல்கள் காலதாமதமின்றி நடைபெறுவதை அனுபவ பூர்வமாக உணர்வீர்கள். இதனால் மிகுந்த உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட்டு வருவீர்கள். பேச்சில் கவனம் தேவை. சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள் கூட அடுத்தவர் மனதைப் புண்படுத்தக் கூடும். உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்படுவர். உறவினர் வீட்டு விசேஷத்தில் முக்கியப் பங்கெடுத்து பணியாற்ற நேரிடும். சொந்தமாக வீடு வாங்க நினைப்போருக்கு நேரம் சாதகமாக அமையும். வாகனங்களில் பயணிக்கும்போது கவனம் தேவை. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சற்று சிரமத்திற்கு ஆளாவர். பிள்ளைகளின் வழியில் கவுரவம் உயரும்படியான சம்பவம் நடைபெறும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆசை உண்டாகும். ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாயுத் தொந்தரவால் இரவு உறக்கம் கெடலாம். முன்பின் தெரியாத நபர்களுக்கு உதவி செய்யப்போய் வீண் பிரச்னைகளைச் சந்திக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செய்யும் பணிகளில் சிறப்பான வெற்றி கிடைக்கும். போலி ஆன்மிகவாதிகளை அடையாளம் கண்டு ஒதுங்குவீர்கள். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. பணியாளர்கள் அலுவலகத்தில் கீழ்மட்ட பணியாளர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியம். உயரதிகாரிகளிடம் நற்பெயர் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர், வியாரிபாரிகள் தங்கள் உழைப்பிற்கான பலனை உடனுக்குடன் அனுபவிப்பர்.  வருமானம் நன்றாக இருக்கும். செயலில் வெற்றி காணும் மாதமாக அமையும்.


பரிகாரம் : தினமும் காலையில் கிழக்கு நோக்கி சூரியனை வணங்கவும்.

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை) »
temple
அசுவனி டிச. 9 வரை ராசிநாதன் செவ்வாயின் 12ம் இடத்து வாசம் சற்று அலைச்சலைத் தரும். நினைத்த காரியத்தை செய்து ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4ம் பாதம்    இந்த மாதத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். மாத துவக்கத்தில் ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4ம் பாதம்    ராசிநாதன் புதனின் சஞ்சாரம் சிந்தனையில் மாற்றத்தை தோற்றுவிக்கும். ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம்     உங்கள் ராசி மீது பார்வையைச் செலுத்தும் குரு மனதில் மகிழ்ச்சியைத் ததும்பச் ... மேலும்
 
temple
மகம் இந்த மாதத்தில் பணிச்சுமை குறையக் காண்பீர்கள். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் தன்னம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.