Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் கார்த்திகை பலன்: ரிஷபம் கார்த்திகை பலன்: ரிஷபம்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கார்த்திகை பலன்: மேஷம்
எழுத்தின் அளவு:
கார்த்திகை பலன்: மேஷம்

பதிவு செய்த நாள்

15 நவ
2020
07:11

அசுவனி

டிச. 9 வரை ராசிநாதன் செவ்வாயின் 12ம் இடத்து வாசம் சற்று அலைச்சலைத் தரும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க ஒரு முறைக்கு இருமுறை அலைய வேண்டியிருக்கும். பொருள் வரவில் எந்த விதமான தடையும் இருக்காது. இந்த மாத கிரக நிலை கூடுதல் செலவுகளைத் தந்தாலும் மனதில் சந்தோஷத்தை முழுமையாக இடம்பெறச் செய்யும். குடும்பத்தினரின் விருப்பத்திற்காக ஆடம்பர செலவு செய்வீர்கள். அதே நேரத்தில் குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலைக்கு வாங்கி ஏமாற வாய்ப்புண்டு கவனம். இக்கட்டான சூழலில் பிரச்னைகளை சமாளிக்கத் தெரியாமல் தடுமாறுவீர்கள். நினைத்த காரியத்தை நடத்தி முடிக்கும் வரை மனதில் அமைதியின்றி காணப்படுவீர்கள். படபடப்பான பேச்சு உங்கள் வெள்ளை உள்ளத்தை வெளிப்படுத்தும். குடும்பப் பெரியோருக்கு சேவை செய்வதில் திருப்தி கொள்வீர்கள். டிச. முதல் வாரத்தில் தொலை துார பயணத்திற்கான வாய்ப்புண்டு. பிள்ளைகளின் செய்கைகளில் முன்னோர்களின் சாயலை உணர்வீர்கள். வயிற்றுவலியால் உடல்லை அவதிக்குள்ளாகலாம். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். தொழில்முறையில் இருந்த எதிர்ப்புகள் விலகும். பணியாளர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் காண்பர். மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்வர். மகிழ்ச்சி தரும் மாதம் இது.


பரிகாரம் : சதுர்த்தியன்று விநாயகரை வழிபட சங்கடம் தீரும்.
சந்திராஷ்டமம் : டிச. 12, 13

பரணி     
இந்த மாதத்தில் சிரமத்தினைத் தரும் எட்டாம் இடம் வலிமையடைவதால் எடுத்த காரியங்களில் இழுபறியைக் காண்பீர்கள். ராசிநாதன் செவ்வாயின் அமர்வு நிலை தேவையற்ற பயத்தை மனதில் தோற்றுவிக்கும். வீண் சந்தேகத்தினால் செயல்களில் தடுமாற்றத்தினை உணர்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கவுரவச் செலவுகள் கூடும். சிக்கனத்தின் அவசியத்தை உணரவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். வித்தியாசமான  முயற்சிகளால் பொருட்கள் வீணாக விரயமாகும். உடன்பிறந்தோரோடு கருத்து வேறுபாடு உருவாகும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போது கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் உங்கள் வார்த்தைகளில் வெளிப்படும் கருத்தினைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் செல்வர். பிள்ளைகளின் பிடிவாதமான எண்ணங்களை மாற்ற முயற்சிப்பீர்கள். மருத்துவ செலவுகள் உண்டாகலாம் என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கடன்பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். தம்பதியருக்குள் இணக்கம் அதிகரிக்கும். தொழில்முறையில் அதிக அலைச்சலைக் காண நேரிடும். பணியாளர்கள் அலுவலகத்தில் கீழ்நிலைப் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். மாணவ, மாணவியர் கவனச்சிதறலால் தடுமாற்றம் காண்பர். இயற்கையில் தன்னம்பிக்கை நிறைந்தவர் என்பதால் துன்பத்தினையும் துச்சமாக எண்ணுவீர்கள். எதிர்நீச்சலில் முன்னேறும் மாதம் இது.


பரிகாரம் : சக்கரத்தாழ்வாரை வணங்கி வர சந்தோஷம் கூடும்.

சந்திராஷ்டமம் : நவ.16, டிச.13

கார்த்திகை 1ம் பாதம்
எட்டாம் இடத்தின் வலிமையால் சிரமப்படும் நீங்கள் இந்த மாதத்தில் தைரியத்துடன் செயலில் இறங்குவீர்கள். எதிர்ப்பையும் சந்திக்கும் மன உறுதி இருக்கும். உங்களுக்கு உதவ முன்வருவோரை சந்தேகமுடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. எந்த விஷயத்திலும் நிதானமான போக்கை கடைபிடியுங்கள். ஒருமுறைக்கு இருமுறை அலசி ஆராய்ந்து செயல்பட்டால் வெற்றி சாத்தியம். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.  சாதாரணமாக பேசினாலும் சுற்றியுள்ளோரால் தவறாகப் பொருள் காணப்படலாம். குடும்பத்தில் சலசலப்பு தோன்றி மறையும். குடும்பப் பிரச்னைகளை அடுத்தவர்களோடு பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. வீண் செலவு அதிகரிக்கும். ஆனாலும் அதற்கேற்ற பணவரவு கிடைக்கும். அண்டை வீட்டாரோடு இணக்கமான நட்பு உருவாகும். வண்டி வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கை தேவை. பிரயாணத்தின் போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் கவனத்தோடு இருப்பது அவசியம். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிரானதாக அமையலாம். உஷ்ண உபாதையால் உடல்நிலையில் சிரமம் உண்டாகும். பணியாளர்கள் அலுவலகத்தில் தங்கள்  திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். சுயதொழில் செய்வோர் வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்வதில் சற்றே தடுமாற்றம் காண்பர். தடைகளை தைரியமுடன் எதிர்கொள்ளும் மாதம் இது.


பரிகாரம் : தினமும்  கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள்.

சந்திராஷ்டமம் : நவ. 17, டிச.14

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar