மூலம் : ஜென்ம ராசியில் இருந்து சனி விலகியிருப்பதால் ஓரளவிற்கு நற்பலன்களைக் காண உள்ளீர்கள். ராசிநாதன் குருவின் இணைவு ஏழரை சனியினால் உண்டாகும் தாக்கத்தினைக் குறைக்கும். தன ஸ்தானம் ஆகிய இரண்டாம் இடம் வலுவாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். இரண்டாம் இடத்தில் சூரியன், புதன், குரு, சனி ஆகிய நான்கு கிரகங்கள் அமர்ந்திருப்பதால் பல்வேறு வழிகளில் பொருள் வரவு இருந்து வரும். குடும்பத்தில் சலசலப்புகளுக்கிடையே கலகலப்பும் கூடும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். அதே நேரத்தில் உங்களது கேலியும், கிண்டலும் மற்றவரின் மனதைப் புண்படுத்தக் கூடும் என்பதால் கவனத்துடன் வார்த்தைகளைப் பிரயோகிப்பது அவசியம். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கக் காண்பீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படும் சமயோஜித புத்தியினால் நிறைய விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணையுடன் லேசான கருத்து வேறுபாடு கொள்வீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்த மனம் நினைத்தாலும் செயல்களில் இயலாது போகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். பெரியோரின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவீர்கள். உத்யோக ரீதியாக பேச்சுத் திறனின் மூலம் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். லாபாதிபதி பலம் பெறுவதால் வியாபாரிகள் தங்கள் திறமையின் மூலம் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் திறமையான பேச்சுக்களின் மூலம் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகும். சமயோஜித புத்தியை செயல்படுத்தி நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். உங்கள் பேச்சுக்கள் நன்மதிப்பினைப் பெறும். குடும்பப் பிரச்னைகளில் நல்ல தீர்வினைக் காண்பீர்கள். நற்பலனைக் காணும் மாதம் இது. பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். சந்திராஷ்டமம் : ஜன. 28
பூராடம் : ராசியில் அமர்ந்திருக்கும் நட்சத்ர அதிபதி சுக்ரனும், இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களும் இந்த மாதத்தில் உங்கள் மனமகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்வார்கள். சுக்ரனின் துணையால் வாழ்க்கைத்தரம் உயரும். மனதில் விதவிதமான ஆசைகள் தோன்றினாலும், நல்லது கெட்டது அறிந்து செயல்படுவீர்கள். தனாதிபதி சனியின் ஆட்சி பெற்ற நிலை பொருளாதார நிலையை வலுப்படுத்தும். பல்வேறு வழிகளில் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றினாலும் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்குக் -குறைவிருக்காது. பிரச்னைக்குரிய விஷயங்களில் உங்களின் திறமையான வாக்கு சாதுர்யத்தினால் வெற்றி காண்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் சாமர்த்தியமாக அணுகி வெற்றி காண்பீர்கள். புதிய வண்டி, வாகனங்கள் சேரும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கடன்பிரச்னைகள் கட்டுக்குள் இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் வாயிலாக உதவி கிடைக்கக் காண்பீர்கள். உங்களது வெற்றியில் அவரது பங்கு குறிப்பிடத்தகுந்த வகையில் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். தொலைதூர ஆன்மிகப் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் இந்த வாரத்தில் தேடி வரும். உத்யோகஸ்தர்கள் தங்களது தனித்திறமையின் காரணமாக அலுவலகத்தில் நற்பெயர் காண்பார்கள். வியாபாரிகள் பேச்சுத்திறமையின் மூலம் தனலாபத்தினைக் காண்பார்கள். மனதில் இருக்கும் தைரியம் செயலில் வெளிப்படும். பேசும் வார்த்தைகளில் கடுமையைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழிலதிபர்கள் வெளியூர் பிரயாணத்தின் மூலம் குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினை அடைவார்கள். சேமிப்புகள் உயரும் நேரம் இது. பிள்ளைகளின் பெயரில் சேமிப்பினில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். மனதிற்கினிய சம்பவங்களை இந்த மாதத்தில் சந்திப்பீர்கள். நற்பலன்களைக் காணும் நேரம் இது. பரிகாரம் : துளசிச்செடிக்கு நீருற்றி வணங்கி வாருங்கள். சந்திராஷ்டமம் : ஜன. 28, 29
உத்திராடம் 1ம் பாதம் : ஏழரைச் சனியின் தாக்கம் ஒருபுறம் இருந்து வந்தாலும், ராசிநாதன் குருபகவானின் இணைவு சனியின் தாக்கத்தினைக் குறைக்கும். ராசியில் அமர்ந்திருக்கும் சுக்ரனால் மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். வாழ்வியல் தரம் உயரக் காண்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பு-களுக்கு இணையாக கலகலப்பான சூழலும் நிலவி வரும். தன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கிரகங்களின் வலிமையால் பொருளாதார நிலை உயரக் காண்பீர்கள். நேரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நன்மை தரும். சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள் ஒன்றினை வாங்குவீர்கள். ராசிநாதனோடு இணைவு பெறும் சூரியனால் மன வலிமை அதிகரிக்கக் காண்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்களில் உண்டாகும் கோளாறுகளினால் ஒரு சில இழப்புகளுக்கு ஆளாகலாம். புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயரக் காண்பீர்கள். ஒரு சிலர் காதுப்பிரச்னையால் அவதிப்பட நேரிடும். இந்த மாதத்தில் சிறுசிறு கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையுடன் லேசான கருத்து வேறுபாடு கொள்வீர்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களை நண்பர்களின் துணையுடன் செய்து முடிப்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சிரமப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் அனுகூலத்தினைத் தரும். தொழில் முறையில் சிறப்பான பேச்சுத்திறமையைக் கொண்டு புதிய சாதனை படைப்பீர்கள். வியாபாரிகள் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். தொழில்முறையில் உங்கள் தனித்திறமை வெளிப்படும். சிறப்பான பேச்சுக்களின் மூலம் அடுத்தவர் மனம் கவர்வீர்கள். உங்கள் எண்ணங்களும், கனவுகளும் இந்த மாதத்தில் நனவாகும். அரசியல் ரீதியினால் ஆன உங்களின் கருத்துக்கள் மற்றவர் மத்தியில் உங்கள் மதிப்பினை உயர்த்தும். நற்பலனைக் காணும் மாதம் இது.
பரிகாரம் : சூரிய வழிபாடு நன்மையைத் தரும். சந்திராஷ்டமம் : ஜன. 29
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »