Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : மாசி மாத ராசி பலன் கடகம் :  மாசி மாத ராசி பலன் கடகம் : மாசி மாத ராசி பலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
மிதுனம் : மாசி மாத ராசி பலன்
எழுத்தின் அளவு:
மிதுனம் : மாசி மாத ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
08:02

மிருகசீரிஷம் 3, 4ம் பாதம் :    ராசிநாதனின் எட்டாம் இடத்துச் சஞ்சாரம் தொடர்வதால் சிரமங்கள் அதிகரிக்கும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருப்பதால் மனம் விரக்தி அடையும். செலவு-கள் கட்டுக்குள் நிற்காது செல்லும். குடும்பத்தில் லேசான சலசலப்பு- உண்டாகும். நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் பேசுவது நல்லது. தொலைபேசி, அலைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் கூடுதல் செலவுகளை சந்திக்க நேரிடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் ஞாபக மறதியின் காரணமாக சிரமப்பட நேரிடும் என்பதால் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மருத்துவ செலவுகளுக்கான வாய்ப்பு உண்டு என்பதால் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. பிரச்னைக்குரிய இந்த நேரத்தில் வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்களது பலத்தை அதிகரிக்கச்செய்து மனக்கவலையை போக்குகின்ற வகையில் அமையும். நண்பர்கள் பக்கபலமாக இருந்து செயல்படுவார்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால் கையிருப்பில் பணம் வைத்துக்கொள்ளாமல் இருத்தல் நலம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாக மேற்கொண்ட பணியை செய்து முடிக்காது ஓயமாட்டீர்கள். லாபாதிபதி விரய ஸ்தானத்தில் நிற்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்காமல் இருத்தல் நலம். நண்பர்களுடன் இணைந்து செய்யும் கூட்டுத்தொழிலில் குறிப்பிடத்தகுந்த லாபம் காண்பீர்கள். மனதில் தோன்றும் விரக்தியான எண்ணங்களை தூர விலக்கிவிட்டு செயல்பட்டீர்களேயானால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். எதிர்நீச்சல் போட்டு சமாளிக்க வேண்டிய மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி
சந்திராஷ்டமம் : மார்ச் 9

திருவாதிரை :     பிப்ரவரி மாதம் சற்று சிரமத்தினைத் தந்தாலும், மார்ச் மாதம் சற்று ஆறுதல் தரும் வகையில் அமையும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் இறங்கிய பணியில் வெற்றி காண்பீர்கள். சுயகவுரவத்திற்காக அடுத்தவர்களின் பணிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் ஈடுபாடு கொள்வீர்கள். மிகவும் நெருங்கிய நபர் ஒருவர் செய்நன்றி மறந்து செயல்படுவதைக் கண்டு மனவருத்தம் உண்டாகலாம். அடுத்தவர்களின் உதவியை அதிகம் எதிர்பாராது சுயபலத்தை மட்டும் நம்பி செயலில் இறங்குவது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் மனமகிழ்ச்சி காண்பீர்கள். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருந்து வருவதால் கையிருப்பில் ஏதும் மிஞ்சாது. பேசும் வார்த்தைகளில் தெளிவான கருத்துக்களை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளின் மூலம் குறிப்பிடத்தகுந்த நன்மை காண்பீர்கள். தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. தகப்பனார் வழி உறவினர் ஒருவருடன் மனஸ்தாபம் தோன்றும் வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றம் கண்டு வரும். பிள்ளைகளின் செயல்களில் சற்றே மந்தத்தன்மை இருப்பதாக உணர்வீர்கள். குடும்பத்தினருடன் கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு. முக்கியமான பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கருத்தில் கொள்வது நல்லது. கவுரவச் செலவுகள் அதிகரிக்கும் நேரம் என்பதால் பண விவகாரங்களில் சுயகட்டுப்பாடு தேவை. கடன்பிரச்னைகள் சற்றே தலையெடுக்கக்கூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதற்கேற்ற லாபத்தினைக் காண்பீர்கள். ஓயாத உழைப்பினால் வெற்றி காணும் மாதம் இது.
பரிகாரம் : சரவணபவ எனும் ஷடாக்ஷர மந்திர ஜபம்
சந்திராஷ்டமம்: மார்ச் 9, 10

புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் :     வீண்கவுரவத்திற்காக அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். உங்களது மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்ள தொலைதூர பிரயாணங்களை செய்ய நேரிடும். அடுத்தவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டிய சூழல் உருவாகும். மன சஞ்சலம் கூடும். அதிகம் பேசாமல் அமைதியாக இருந்து எண்ணிய காரியத்தை சாதிப்பீர்கள். நினைத்ததை நிறைவேற்ற கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். பொருளாதார நிலையில் சிறிது பின்னடைவு உண்டாகும். மார்ச் முதல் வாரத்தில் வரும் பணவரவு ஓரளவிற்கு பொருளாதாரப் பின்னடைவை சமன் செய்ய உதவும். உடன்பிறந்தோரால் உதவிகள் கிட்டும். சஞ்சலமான மனநிலையில் கூட தைரியத்துடன் ஒரு சில காரியங்களில் இறங்கிவிடுவீர்கள். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருவீர்கள். ஒரு சிலருக்கு நரம்பு மண்டலத்தில் பிரச்னைகள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் சிறந்த வழிகாட்டியாக அமையும். நண்பர்களின் மூலம் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் காண்பீர்கள். நண்பர்களுடன் பொழுதினைக் கழிப்பதில் இன்பம் காண்பீர்கள். மாற்று மொழி பேசும் பெண் நண்பர் ஒருவர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி காணத் துவங்குவீர்கள். பார்க்கும் எல்லா விஷயங்களிலும் ஏன், எதற்கு, எப்படி என்ற ஆராய்ச்சி மனப்பான்மை தோன்றும். தொழில் ரீதியான சிந்தனைகள் சதா மனதை ஆக்கிரமிக்கும். தொழில் நிலை மிகுந்த முன்னேற்றத்தோடு நல்லதொரு கவுரவத்தைத் தருவதாக அமையும். வியாபாரிகளுக்கு லாபத்தில் நஷ்டம் உண்டாகும் சூழல் தொடரும். சுமாரான பலன்களைத் தரும் மாதமிது.

பரிகாரம் : ஸ்ரீ தியானேஸ்வர ஸ்வாமி
சந்திராஷ்டமம் : மார்ச் 10

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar