Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : மாசி மாத ராசி பலன் கும்பம் : மாசி மாத ராசி பலன் கும்பம் : மாசி மாத ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மகரம் : மாசி மாத ராசி பலன்
எழுத்தின் அளவு:
மகரம் : மாசி மாத ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
08:02

உத்திராடம் 2, 3, 4ம் பாதம் :    ராசிநாதனின் நிலை ஒரு விஷயத்தை எளிதாக செய்து முடிக்க துணைபுரியவில்லை என்றாலும் இடைஞ்சல் எதையும் தற்போது பெரிதாகத் தரவில்லை. ஆக்கபூர்வ சிந்தனைகள் மனதினை ஆக்கிரமிக்கும். தன ஸ்தானத்தில் இருந்து வரும் கிரகங்களில் நிலை பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும். பகல் பொழுதினில் செலவுகள் அதிகரிக்கவும், மாலை நேரத்தில் செலவுகள் குறையவும் காண்பீர்கள். வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் உங்களையும் அறியாமல் கடுமை வெளிப்படக்கூடும் என்பதால் மற்றவர்கள் மனம் புண்படாத வண்ணம் கவனித்துப் பேசுவது நல்லது. அநாவசிய செலவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். மற்றவர்களோடு தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்து லேசான மன சஞ்சலம் கொள்வீர்கள். ஆலயங்களுக்கு செல்வதில் மன நிம்மதி கொள்வீர்கள். மனதில் பட்டதை தடாலடியாக பேசுவதால் அவப்பெயர் உண்டாகலாம். எதையும் ஆராய்ந்து பேசுவது நல்லது. குடும்பத்தில் லேசான சலசலப்பு இருந்து வரும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் இருந்து வருவார்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். வண்டி, வாகனங்கள் ஆதாயத்தினைத் தரும் வகையில் அமையும். இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளால் ஒரு சில ஆடம்பர செலவுகளுக்கு ஆளாக நேரிடும். சிந்தனையில் லேசான தடுமாற்றம் உருவாவதை உணர்வீர்கள். தொற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் உடல்நிலையில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நலம். வாழ்க்கைத்துணையோடு லேசான கருத்துவேறுபாடு கொள்வீர்கள். அவரது பெயரில் சேமிப்பில் ஈடுபட ஏதுவான காலமாக இருக்கும். வாழ்வியல் பற்றிய தத்துவார்த்த சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். தொழில் ரீதியாக கடும் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். ஒருசிலருக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. சரிசமபலனைத் தரும் மாதம் இது.


பரிகாரம் : ஸ்ரீ நாகாத்தம்மன் - புற்றில் பால் ஊற்றுதல்

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 26

திருவோணம் :    சென்ற மாதத்தைப் போலவே இந்த மாதத்திலும் நற்பலன்களைக் காண உள்ளீர்கள். மாதத்தின் துவக்கத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தனிப்பட்ட முறையில் உங்கள் கவுரவத்தினை உயர்த்திக் கொள்வீர்கள். பொதுப் பிரச்னைகளில் முன்நின்று செயல்படுவதால் புகழ் உயரும். இக்கட்டான சூழலில் உங்களின் விவேகமான செயல்திட்டங்கள் வெற்றிபெற்று நற்பெயரைப் பெற்றுத் தரும். ‘பொய்மையும் வாய்மையிடத்து’ என்ற குறளுக்கேற்ப எங்கே எப்படிப் பேச வேண்டும் என்பதை அறிந்துகொண்டு நேரத்திற்குத் தக்கவாறு வார்த்தைகளைப் பிரயோகித்து நற்பலன் காண்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி இருந்து வரும். நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகைகள் விரைவில் வசூலாகும். எதிர்பார்க்கும் பொருள்வரவு தவறாது இந்த மாதத்தில் வந்து சேரக் காண்பீர்கள். புதிய பெண் நண்பர்களின் மூலம் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பீர்கள். தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பொழுதுபோக்குக் கருவிகளாகப் பயன்தரும். உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். மாணவர்களின் கல்வித்தரம் மேன்மையடையும். உறவினர்களுடன் கலந்துரையாடுவதில் மனமகிழ்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளால் கூடுதல் செலவுகளை சந்திக்க நேரலாம். அவர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையும், நிதானமும் தேவை. கவுரவத்திற்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கக் கூடும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. குடும்பப் பெரியவர்களின் கருத்துக்களை அறிந்து செயல்பட வேண்டியது அவசியம். தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். குறைந்த விலையுடைய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடலாம். கூட்டுத்தொழில் செய்து வருவோர் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்யோகஸ்தர்கள் அலுவலகக் கோப்புகளை பொறுமையுடன் கையாள்வது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதம் இது.

பரிகாரம் : ரத ஸப்தமி - சூரிய பூஜை.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 26, 27

அவிட்டம் 1, 2ம் பாதம் :    ராசியில் தொடரும் வலுவான கிரகங்களின் நிலை இந்த மாதத்தில் உங்களை தன்னம்பிக்கையோடு செயல்பட வைக்கும். எடுத்த காரியங்களை உடனுக்குடன் செய்து முடித்துவிட வேண்டும் என அவசரப்படுவீர்கள். ஆயினும் நீண்ட நாட்களாக மனதில் திட்டமிட்டு வந்திருப்பதால் செயல்திறனில் தடை ஏதும் இருக்காது. பொருள் வரவு திருப்தியான முறையில் இருந்து வரும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவி வரும். வார்த்தைகளில் நிதானத்தைக் கையாளுவீர்கள். உடன்பிறந்தோரால் நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை காண்பீர்கள். குடியிருக்கும் வீட்டினில் மாற்றம் செய்ய முற்படுவீர்கள். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். பிரயாணத்தின்போது உடன் பயணிப்போரிடம் கவனத்துடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் வழியில் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். ஆயினும் அவை சுப செலவுகளாக அமைவதால் கவலை கொள்ளத் தேவையில்லை. நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுபவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு உறுதுணையாய் இருந்து செயல்படுவீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்த நினைத்து சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவீர்கள். ஆயினும் எதிர்பாராத செலவுகளால் சற்று சிரமப்பட வேண்டி இருக்கும். நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவருக்காக செலவு செய்ய நேரிடும். இதனால் குடும்பத்தில் சலசலப்பு உண்டாகலாம். அடுத்தவர்களின் பிரச்னைகளுக்கு முன் நிற்க வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மன நிம்மதி காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தின் காரணமாக அதிக அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். சுயதொழில் செய்பவர்கள்  உடனடி லாபத்தைக் காண இயலாது சிரமப்படுவார்கள். திருப்தியைத் தரும் மாதம் இது.


பரிகாரம் : ஸ்ரீ சரபேஸ்வர ஸ்வாமி
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 27, 28

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar