Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : மாசி மாத ராசி பலன் மேஷம்: பங்குனி ராசிபலன் மேஷம்: பங்குனி ராசிபலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
மீனம் : மாசி மாத ராசி பலன்
எழுத்தின் அளவு:
மீனம் : மாசி மாத ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
08:02

பூரட்டாதி 4ம் பாதம்:     சென்ற மாதம் இருந்து வந்த சாதகமான நிலை மாறி இந்த மாதத்தில் 12ம் இடமாகிய விரய ஸ்தானம் வலுப்பெற சற்று சிரமத்தினைக் காண உள்ளீர்கள். ஆயினும் ராசிநாதனும் நட்சத்திர அதிபதியும் ஆகிய குரு பகவான் ஜெய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் எவ்வளவு பெரிய சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளீர்கள் என்பதில் ஐயமில்லை. பொருளாதார நிலை சரிவினை சந்திக்கும். தொய்வினைக் காணும் பொருளாதார நிலையைத் தூக்கி நிறுத்த முயற்சித்து வருவீர்கள். குடும்பத்தில் சிறு சலசலப்பு தோன்றுவதும், பின்பு மறைவதுமாக தொடர்ந்து இருந்து வரும். ஒரு சிலருக்கு கண்பார்வையில் குறைபாடு தோன்றும் வாய்ப்பு உள்ளதால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடன்பிறந்தோரின் உதவியுடன் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பீர்கள். வண்டி, வாகனங்களால் ஒரு சில செலவுகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண அதிக அளவில் உழைக்க வேண்டியிருக்கும். எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு மனக்குறை மனதின் மூலையில் இருப்பதை உங்களால் தவிர்க்க இயலாது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையோடு லேசான கருத்து வேறுபாடு கொள்வீர்கள். அவரது உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராத செலவினங்களைக் கண்டு அஞ்ச நேரிடும். செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டால் வெற்றி காண இயலும். அயல்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் மனதிற்கு உற்சாகத்தினை உண்டாக்கும். தொழில் ரீதியாக உங்களுடைய நேர்மையான செயல்பாட்டினால் நற்பெயரை அடைவீர்கள். வியாபாரிகள் கூட்டுத்தொழிலில் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். இரவினில் நிம்மதியான உறக்கம் வராது தவிக்க நேரிடும். சரிசமபலனைத் தரும் மாதம் இது.


பரிகாரம் : கந்த சஷ்டி கவசம்.

சந்திராஷ்டமம் : மார்ச் 2, 3

உத்திரட்டாதி :    இந்த மாதத்திய கிரக நிலை சற்று அலைச்சலைத் தந்தாலும் வெற்றிக்கு குறைவின்றி அமைந்திருக்கிறது. எடுத்த காரியங்களில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். செய்யும் தொழிலில் ஸ்திரத்தன்மையை உருவாக்கிக்கொள்வதற்கு பாடுபடுவீர்கள். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியமாக குறிப்பிடத்தகுந்த தனலாபம் நிச்சயமாக இருந்து வரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். மாற்று மொழி பேசும் பெண்டிரால் நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மையைத் தரும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றத்தினைக் காண்பார்கள். இந்த மாதத்தில் திடீர் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலவாழ்விற்காக புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். குடியிருக்கும் வீட்டினில் மாற்றம் செய்ய ஏதுவான காலமாக அமையும். சிந்தனையில் தோன்றுவதை உடனுக்குடன் நடைமுறைப்படுத்த நினைப்பீர்கள். இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்¬க்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். செலவுகள் கைமீறிச் செல்வதாக உணர்வீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் எளிதில் முடிவிற்கு வராமல் இழுபறியைத் தரலாம். தொழில் ரீதியாக சற்று அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். இருந்தாலும் தொழிலில் ஸ்திரத்தன்மை உருவாகும். நற்பெயரை அடைவதோடு நல்லதொரு கவுரவமும் கிடைக்கப்பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் செய்வோர் அதிக பட்ச உழைப்பினை வெளிப்படுத்தி நற்பெயரை அடைவார்கள். நம்மால் முடியும் என்று நம்பி இறங்கிய காரியங்களில் லேசான தொய்வு உண்டாகலாம். உங்களது தயாள குணம் வெளிப்படும் வகையிலான சம்பவங்கள் நடைபெறும். தான தருமங்கள் செய்வதில் விருப்பம் கொள்வீர்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : பிரதோஷ வழிபாடு.
சந்திராஷ்டமம் : மார்ச் 3

ரேவதி :    மாதத்தின் துவக்கத்தில் சாதகமான பலனைக் காணும் நீங்கள் போகப் போக சற்று சிரமம் உண்டாகக் காண்பீர்கள். மனதில் இருக்கும் கஷ்டத்தினை வெளிப்படுத்திக் கொள்ளாது எதையும் தாங்கும் இதயத்தோடு நடந்து கொள்வீர்கள். 12ம் இடத்தின் வலிமையினால் இழுபறியான சூழலைச் சந்திக்க உள்ளீர்கள். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருப்பதால் மன வருத்தம் தோன்றக்கூடும். பேசும் வார்த்தைகளில் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும். உங்களது ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உபயோகமாய் அமையும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தினை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் அமையும். அண்டை அயலாருடன் பழகும்போது எச்சரிக்கை தேவை. குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் செலவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் முடிந்தவரை அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதல் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். அதிக அலைச்சல் காரணமாக ஞாபகமறதியினால் அவதிப்பட நேரிடலாம். செய்யும் செயலில் உண்டாகும் தவறுகளை பேச்சுத்திறன் மூலம் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வழக்கு விவகாரங்களில் அடக்கி வாசிப்பது நல்லது. தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவுகளால் சிரமம் காண நேரிடலாம். புதிய முயற்சிகளை சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பது நன்மை தரும். தொழில்முறையில் சிரமம் ஏதுமின்றி சாதித்து வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தினை சந்திப்பார்கள். அந்நிய தேசத்தில் பணிபுரிவோருக்கு உத்யோக ஸ்திரத்தன்மை கிடைக்கும். அதிக அலைச்சலை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி காணும் மாதமே.

பரிகாரம் : கருடாழ்வார் வழிபாடு.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 3, 4

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar