Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மகரம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் மகரம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ... மீனம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் மீனம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2022 முதல் 13.4.2023 வரை)
கும்பம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
23:05

அவிட்டம்2,3 ஆம் பாதம்: ஆரோக்யம் அருமையாக இருக்கும்.

பொதுவாக எந்த ஒரு விஷயத்திலும் உடனடியாக முடிவெடுப்பது சிரமத்தினைத் தரக்கூடும். எதையும் நன்கு ஆராய்ந்து செயல்படுவது நல்லது. சந்தேகம் ஏற்பட்டால் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவெடுத்துச் செயல்படுவது நலம். அவசர வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமல் போகலாம். கவனத்துடன் பேசுவது நல்லது.
நிதி:
வரவு நிலை அதிகரிக்கக் காண்பீர்கள். பொருள் வரவு நன்றாக இருந்தாலும் அவசரத் தேவைக்கு எடுத்து உபயோகிக்க இயலாது. கண்ணுக்குத் தெரியாத அளவில் சேமிப்பாக உயருமே தவிர அன்றாட செலவுகளுக்கு சற்று சிரமம் காண வேண்டியிருக்கும்.
குடும்பம்:
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு ஆற்றுவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நல்லுறவு உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெண்களால் மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படும்.
கல்வி:
நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். காமர்ஸ், எக்கனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுன்டன்ஸி, கணிதம், ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். போட்டித் தேர்வுகளுக்குக் கூடுதல் பயிற்சி தேவை.
பெண்கள்:
எந்த ஒரு விஷயத்தையும் வாழ்க்கைத்துணைவரின் ஆலோசனையின் பேரிலும், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையின் பேரிலும் செய்து வருவது நல்லது. குடும்பத்திற்காக உழைத்து நற்பெயர் பெறுவீர்கள்.

உடல் நிலை:
குரு பார்வை காரணமாக எந்த ஆரோக்யப் பிரச்னையும் அநாயாசமாகச் சமாளித்துவிடுவீர்கள். பெரிய தொல்லை என்று எதுவும் வராது. ஜீரணத் தொல்லை ஏற்பட்டாலும் தற்காலிகமாகத்தான் இருக்கும். மன நிம்மதி உண்டு.
தொழில்/பணி:
தொழில் போட்டிகளை விலக்குவதற்கு நேர்மையான முறையை மட்டுமே பின்பற்றுங்கள்.. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நங‘கஙள நினைத்த சம்பளம் கிடைக்கப் பொறுமை தேவை. பணியில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் துதிகளைச் சொல்லி நன்மையடையுங்கள்.

சதயம்: அதிக நிம்மதி கிடைக்கும்

பொதுவாகவே முன்பைவிட உங்களின் செயலில் வேகம் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத வகையில் நீங்கள் மிக மதிக்கும் நபரின் ஆதரவு கிட்டும். ஆண்டின் துவக்கத்தில் இருந்த சோர்வு போகப்போக நீங்கி நிம்மதி கூடுதலாகும்.
நிதி:
பற்றாக்குறை என்று எதுவும் இருக்காது. அப‘ரிமித ஓட்டமும் இருக்காது. மேமாதம் முதல் ஒரு சில மாதங்களுக்கு மட்டும் விரைவாகச் செல்வம் பெருகும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. ஒவ்வொரு முறையும் தாமதமாகக் கிடைத்தாலும் பணவரவில் ஏமாற்றம் இருக்காது.
குடும்பம்:
குடும்ப விவகாரங்களில், எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானித்துச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்‘தை அரவணைத்துப் போவீர்கள். பிள்ளைகளிடம் லேசான கண்டிப்புக்காட்ட வேண்டியது அவசியம். அது கடுமையான கண்டிப்பாக வேண்டாம்.
கல்வி:
எஞ்சினீயரிங் மாணவர்கள் அலட்சியமின்றிப் படித்தால் நீங்கள் எதிர்பார்த்ததைவிடவும் சிறந்த முறையில் வெற்றிபெறுவீர்கள். டாக்டரேட் செய்பவர்கள் ஜமாய்ப்பீர்கள். மருத்துவப்படி‘ப்பில் சேர்ந்தவர்கள் சிரமப்பட்டுப் படித்து  சாதனைகள் செய்வீர்கள்.
பெண்கள்:
நிதானமே முக்கியம் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் நிம்மதி உறுதி. பணி செய்யும் பெண்களுக்கு. வெற்றி தரும் ஆண்டாக இது அமையும். பொறாமை காரணமாகப் பகைகொண்டு விலகுபவரைக் கண்டுகொள்ள வேண்டாம். போகட்டும் என்று விட்டுவிடுங்கள்.

உடல் நிலை:
கடந்த ஆண்டு இருந்த கவலைதரும் நிலைமை மாறி மனதில் நம்பிக்கை வருமளவுக்கு ஆரோக்யம் மேம்படும். தலைவலி போன்ற தற்காலிகப் பிரச்னைகள் ஏற்பட்டு, கண் பரிசோதனைக்குப் பின் சரியாகும்.
தொழில்/பணி:
சக ஊழியர்கள் மூலம் ஏற்பட்டுக்கொண்டிருந்த தொல்லை தன்னிச்சையாய் முடிவுக்கு வரும் .  அயல்நாட்டு சம்பந்தமுடைய பணி மற்றும் தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, இரும்பு, சிமெண்ட் போன்ற தொழில்களில் உள்ளோர் முன்னேற்றம் காண்பார்கள். சமையல் கலைஞர்கள், மருத்துவர்கள் உழைப்பால் முதல் இடத்தினைப் பிடிப்பார்கள்
பரிகாரம்:
ராமாயணம், சுந்தரகாண்டம் தொடர்ந்து படித்தால் அனைத்து பிரச்னைகளிலிந்தும் விடுபடுவீர்கள்.

பூரட்டாதி,1,2,3 ம் பாதம்: வருமானம் நிறையக் கூடும்.
பொதுவாக இந்த ஆண்டு பொறுப்புகள் அதிகரிக்கும். பணிச்சுமை நாளுக்கு நாள் கூடும். எனவே அவ்வப்போதைய பணிகளை உடனுக்குடன் முடித்துவிடுவது நல்லது. ராசிநாதன் குரு பகவானின் சாதகமான சஞ்சார நிலை வெற்றிக்குத் துணை நிற்கிறது. புதிய சொத்து வாங்குதல், சேமிப்புகளில் ஈடுபடுதல் போன்ற சாதகமான பலன்களைக் காண்பீர்கள்.
நிதி:
செலவுகள் கூடியிருப்பதாக உணர்வீர்கள். ஆனால் வருமானம் நிறையக் கூடியிருப்பதையும் காண்பீர்கள். கையில் ரொக்கமாக சேமித்து வைக்காமல் அசையாச் சொத்துக்களாக சேமிப்பினை உருமாற்றம் செய்ய இயலும்.. நல்ல ஆலோசனை பெற்று  கவனமாக ஷேர்கள் வாங்கலாம்.
குடும்பம்:
குடும்பத்தை விட்டு பிரிந்திருப்போர் இந்த வருடத்தில் தங்கள் குடும்பத்தினருடன் இணைவார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் வெற்றிக்குத் துணை நிற்பார். எனவே அவரோடு உங்கள் எண்ணங்களை பரிமாறி மனம் விட்டுப்பேசுவீர்கள். இதனால் ஒன்றுமை பலப்படும்.
கல்வி:
தடைக்குப் பின் சாதனை உண்டு.  பொறுவாகவே இந்த ஆண்டு மகிழ்ச்சி நிறைந்த வெற்றிகள் தரும். அதிலும் நிதி சம்பந்தமாகப் படிப்பவர்கள் மற்று ஆராய்ச்சி செய்பவர்கள் மேலும் அதிக வெற்றி பெறுவீர்கள். அக்கவுன்ட்ஸ் மற்றும் காமர்ஸ் படிப்பில் சிறக்க முடியும்.
பெண்கள்:
பணம் சார்ந்த முக்கியமான விவகாரங்களில் தனித்துச் செயல்பட்டு வெல் வீர்கள். அடுத்தவர்களின் குடும்ப விவகாரங்களில் நன்மை புரிந்து மதிப்பை அதிகரித்துக் கொள்வீர்கள். அதிகம் பேசாது சாதித்து வெற்றி பெறுவீர்கள்.

உடல் நிலை:
ஆரோக்யம் மேம்படும். கடந்த ஆண்டு மாற்றி மாற்றி உடல் நலக் கோளாறு ஏற்பட்டு பயமுறுத்திய நிலை மாறி நல்ல வலுவுடன் செயல்பட்டு நிம்மதி காண்பீ‘ர்கள். அதிக வேகமும் பரபரப்பும் வேண்டாம்.
தொழில்/பணி:
நேர்மையான உழைப்பின் காரணமாக செய்யும் பணியில் பெருமை உருவாகும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஞாபகமறதியின் காரணமாக சிறு தொல்லைகள் ஏற்பட்டு சிரமப்பட நேரலாம். ஆயினும் நீங்கள் சம்பாதித்திருக்கும் நற்பெயர் உங்களுக்குத் துணை நிற்கும்.

பரிகாரம்:
அனுமாரை வணங்கி அவர் துதிகள் சொன்னால் நன்மைகள் அடையலாம்.

 
மேலும் தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2022 முதல் 13.4.2023 வரை) »
temple
அசுவினி: பண்புடனும், அன்புடனும் பழகும் நீங்கள் இந்த புத்தாண்டில் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4 பாதம் எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளித்து காரிய வெற்றி காணும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3,4 பாதம் " தங்கள் தோரணையில் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் வல்லமை உடைய உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம் : எடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பதில் வல்லவர்களான உங்களுக்கு இந்த புத்தாண்டில் ... மேலும்
 
temple
மகம்: நிதானமாக செயல்பட்டு படிப்படியாக முன்னேறும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் தைரியம் அதிகரிக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.