பதிவு செய்த நாள்
19
மே
2021
04:05
திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, கோவில்களில் இருந்து, தினமும், 500 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு உதவியாக உறவினர்களும் தங்கி உள்ளனர்.ஊரடங்கு உத்தரவு காரணமாக, பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு உள்ளதால், நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் இருந்து, 200; புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து, 150 மற்றும் பெரியபாளையம் அம்மன் கோவிலில் இருந்து, 150 என, மொத்தம், 500 பேருக்கு, தினமும், இலவசமாக உணவு கொண்டு வந்து, வினியோகிக்கப்படுகிறது.