Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாமி படங்களுக்கு வாசனயற்ற மலர்களை ... நலம் தரும் மந்திரம்
முதல் பக்கம் » துளிகள்
குலம் காக்கும் குலதெய்வம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2021
07:06


காஞ்சி மகாபெரியவர் கிராமம் ஒன்றிற்கு விஜயம் செய்தார். அவரைத் தரிசிக்க வந்த விவசாயி ஒருவர், ‘‘சுவாமி... என் வாழ்க்கையே ரொம்ப போராட்டமா இருக்கு. குடும்பத்தில் ஒரே பிரச்னை’’ என்று சொல்லி அழுதார்.
‘‘குலதெய்வத்திற்கு ஒழுங்கா பூஜை செய்றியா..’’ என்று கேட்டார்.
‘‘எங்க முன்னோருங்க பொழைப்பு தேடி. பர்மா போனவங்க. என் பாட்டனாருக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது. அதனால் பின்னால் வந்த வம்சத்தாருக்கு குலதெய்வமே தெரியாமப் போச்சு’’ என்றார்.  
‘‘யாராவது  குடும்பத்து பெரியவங்க கிட்ட உன் குலதெய்வம் பத்தி கேட்டுட்டு வா’’ என்றார் மகாபெரியவர்.
‘‘என்ன சாமி... ஊர்ல எத்தனையோ சாமி இருக்க, குலசாமிகிட்ட அப்படி என்ன இருக்கு?’’ என இழுத்தார்.
‘‘காரணமாகத்தான் சொல்றேன். உடனே கிளம்பு. குலதெய்வம் யாருன்னு கண்டுபிடி! அதற்கு பூஜை முடிச்சுட்டு வா’’ என்று அனுப்பி வைத்தார்.  
ஒரு மாதத்திற்கு பிறகு விவசாயி ஆர்வத்துடன் மகாபெரியவரை பார்க்க வந்தார்.
‘‘சுவாமி. எங்க அப்பா வழி பாட்டனார் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்டே எங்க குலதெய்வம் பற்றி பேசி கண்டுபுடிச்சுட்டேன். அதோட பேர் பேச்சாயி. நடுகல்லா இருக்கும் அந்த அம்மன் கோயிலைச் சுத்தம் செஞ்சு பாலுாற்றி அபிேஷகம் செஞ்சுட்டு வர்றேன்’’ என்றார்.
‘‘அந்தக் கோயில நல்லா பார்த்துக்கோ. தினமும் தீபமேற்றி வா... கஷ்டம் எல்லாம் ஓடிப்போயிடும். பூவும், பொட்டுமா பேச்சாயி அம்மன் ஜொலிச்சா உன் குடும்பமே ஜொலிக்கும். அடுத்த வருஷம் இதே தேதியில் என்னை வந்துபாரு’’ என்றார் மகாபெரியவர்.
ஓராண்டுக்குப் பின், மகாபெரியவரைத் தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார் விவசாயி.  
‘‘சுவாமி. குலதெய்வத்திற்கு பூஜை பண்றதால நிம்மதியா இருக்கேன். என் நிம்மதிக்கு வழிகாட்டினது நீங்க தான்’’ என்று சொல்லி கும்பிட்டார்.
‘‘சங்கிலிக் கண்ணி போல அறுபடாம வந்தது தான் கோத்திரம் (வம்சம்). இதில் பிறந்த குழந்தைகளுக்கு முடி கொடுத்தல், காது குத்து எல்லாமே குலதெய்வத்துக்குத்தான். பாட்டன், முப்பாட்டன் என வழிவழியா காப்பாத்தின சுவாமி நம்மையும் காப்பாத்துங்கிற எண்ணம் உனக்கு வந்திருக்கே.. அதுவே பெரிய அனுக்கிரஹம் தான். நம்ம பாட்டன்மாரும், தாய், தகப்பனும் வணங்கின கோயில் என்கிற ரீதியிலே நாத்திகனா இருக்கிறவன் கூட, குலதெய்வம் கோயிலுக்கு வந்து விடுவான். அவர்கள் காலடி பட்ட இடத்தில் நாமும் நிற்பது பெரிய விஷயமுனு நினைப்பான். அப்போ பக்தி தானா வந்துடும். குலதெய்வம் கோயிலிலே போயி வழிபட்டா, எவ்வளவு பெரிய தோஷமும் இல்லாம போயிடும். ஆயிரம் தெய்வம் இருந்தாலும், குலதெய்வத்துக்கு ஈடாகாது’’ என்று ஆசியளித்தார்.
அங்கே இருந்த எல்லா பக்தர்களுமே குலதெய்வ வழிபாட்டின் சிறப்பை அறிந்து பரவசம் அடைந்தனர்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு விதமான வரலாறு, சிறப்பு கொண்டது. இத்தகைய கோவில்களில் ... மேலும்
 
temple news
பொதுவாக மனிதர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து பாக்கியமும் கிடைத்தாலும், குழந்தை பாக்கியம் இல்லை ... மேலும்
 
temple news
தீய சக்தியால் கடுமையான இன்னல்களுக்கு ஆளான கிராமத்தினரை காப்பாற்ற தோன்றிய விஷ்ணு, தீய சக்தியை ஒழித்து, ... மேலும்
 
temple news
சாப விமோசனம் என்பது சாபம், பாவம் அல்லது தீய நிய நிலையில் இருந்து விடுபடுவதை குறிக்கிறது. அறியாமலோ, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar