Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளிக்கவசத்தில் நாமக்கல் ... மீனாட்சி அம்மன் கோயில் அனைத்து வாசல்களை திறக்க எதிர்பார்ப்பு! மீனாட்சி அம்மன் கோயில் அனைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் கனமழை; பக்தர்கள் பத்திரமாக திரும்பினார்
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் கனமழை; பக்தர்கள் பத்திரமாக திரும்பினார்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2021
10:07

 வத்திராயிருப்பு: சதுரகிரியில் பெய்த கனமழையால் கோவிலில் தங்கிய பக்தர்கள் நேற்று காலை பத்திரமாக திரும்பினர். கோவிலில் ஆனி மாத அமாவாசை வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த மழையால் பிரதோஷ நாளன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் காலையில் மழை பெய்யாததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மாலை 5 மணிக்குமேல் மழை சூழல் உருவாகி, இரவு 6:30 மணி முதல் 8:30 மணி வரை கனமழை பெய்ததால் மலைப்பகுதி ஓடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயிலில் இருந்த 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது.

கன மழையின் தாக்கம் குறித்து அறநிலையத்துறை, வனத்துறை, மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனைக்கு பிறகு அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் ரோடுகளில் செக்போஸ்ட் அமைத்து போலீசார் விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே நேற்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததை வனத்துறையினர் உறுதிப்படுத்திய பிறகு மலையில் இருந்து பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனர். சங்கிலிப் பாறை, மாங்கனி ஓடைகளில் கயிறு கட்டி பக்தர்களை வனத்துறையினர் அழைத்து வந்தனர். நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி மலையை நோக்கி வணங்கி சென்றனர். தொலைதூர ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் சதுரகிரி அருகிலுள்ள மாவூற்று உதயநிகிரிநாதர் கோயில் தெப்பத்தில் குளித்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில் நேற்று பகல் 12 மணிக்கு சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதிகளில் அமாவாசை வழிபாட்டை கோவில் அர்ச்சகர்கள் பக்தர்கள் இன்றி செய்தனர். தொடர்ந்து சதுரகிரி வனப்பகுதியில் மழைசூழல் காணப்படுவதால் இன்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார். வத்திராயிருப்பு, பேரையூர் போலீசார், வனத்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar