Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மிதுனம் : புரட்டாசி ராசிபலன் மிதுனம் : புரட்டாசி ராசிபலன் சிம்மம் : புரட்டாசி ராசிபலன் சிம்மம் : புரட்டாசி ராசிபலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2021முதல் 16.11.2021 வரை)
கடகம் : புரட்டாசி ராசிபலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
15:39

புனர்பூசம் - 4:
சொல்லாற்றலுடன் செயலாற்றலும் கொண்டு செயல்படும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள்தான் என்பதை உணருங்கள். உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. கடன்களிலிருந்து விடுபடவும் உகந்த நேரமிது. தொழிலில்  உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும்.  இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். அரசியல்வாதிகள் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. மாணவமணிகள்: தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்குரிய வாய்ப்பு தெரியும்.  மிகச் சிலரே உங்களை புரிந்து கொள்வார்கள்.  நண்பர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: வேல்முருகனை வழிபட குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்யலாம்.
சந்திராஷ்டமம்: செப் 18, அக். 15, 16
அதிர்ஷ்ட நாள்: அக். 7, 8

பூசம்:
கடின உழைப்பை கண்டு அஞ்சாத பூச நட்சத்திர அன்பர்களே நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த மாதம் நட்சத்திராதிபதி சனி சஞ்சாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. சுபவிஷயயங்களில் கலந்து கொள்ள நேரலாம். பண வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். பணியில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: செப் 19, அக். 16, 17
அதிர்ஷ்ட நாள்: அக். 8, 9

ஆயில்யம்:
அடுத்தவர்களை அனுசரித்து சென்று காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உடைய ஆயில்ய நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். பணியில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: செப் 20, அக். 17
அதிர்ஷ்ட நாள்: அக். 9, 10

 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2021முதல் 16.11.2021 வரை) »
temple
அசுவினி:எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமான முடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, ,3 ,4: மனசாட்சியுடன் செயல்படும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: எடுத்த செயல்களை திட்டமிட்டு செய்யும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வீடு - ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: முயற்சிகளில் பின்வாங்காத புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல ... மேலும்
 
temple
மகம்: அளவான பேச்சும், அதிக செயல்திறனும் காட்டும் மக நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எதிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.