சிக்கலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2021 02:11
நாகப்பட்டினம்: சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான், அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் முருகன் சக்திவேல் வாங்குவார். பின், திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழா விமர்சையாக நடக்கும். 4ம் தேதி துவங்கிய விழா 13ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, நாளை இரவு நடக்கவுள்ள வேல் வாங்குதல் நிகழ்ச்சி, 9ம் தேதி சூரசம்ஹாரம், 10ம் தேதி திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.மற்ற நாட்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.