கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலி: சபரிமலையில் பக்தர்கள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2021 10:11
சபரிமலை: கட்டுப்பாடுகள் தளர்வு, விடுமுறை நாள் என்பதால் சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல கால சீசன் துவங்கியுள்ளது.
பம்பையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் பம்பை செல்ல தடை விதிக்கப்பட்டு நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டனர். கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின் பக்தர்கள் கூட்டமாக சன்னிதானம் வந்ததால் நீண்ட வரிசை காணப்பட்டது. நேற்று தண்ணீரின் அளவு மேலும் குறைந்ததால் பம்பையில் குளியல் தவிர மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமாக இருந்தது. தரிசனத்துக்கு நீண்ட வரிசை காணப்பட்டது. சபரிமலையில் பாதுகாப்பு, மீட்பு பணிகளுக்காக மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மத்திய அதிவிரைவு படை போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். பம்பை, சன்னிதானத்தில் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும்.உதவிகள் வழங்கவும் பம்பை, சன்னிதானத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.