Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: மார்கழி ராசி பலன் மிதுனம்: மார்கழி ராசி பலன் மிதுனம்: மார்கழி ராசி பலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
ரிஷபம் : மார்கழி ராசி பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : மார்கழி ராசி பலன்

பதிவு செய்த நாள்

15 டிச
2021
03:12

க்ருத்திகை - 2, 3, 4: எந்த பிரச்சனைகளிலும் தீர்வு சொல்வதில் கெட்டிக்காரரான க்ருத்திகை நக்ஷத்ர அன்பர்களே நீங்கள் தலைமை தாங்குவதில் வல்லவர்கள். இந்த மாதம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.  குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பெண்களுக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். அரசியல் துறையினருக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மாணவர்களுக்கு பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை படிப்பது நல்லது. சகமாணவர்களால் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீகாளியம்மனை வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 01, 02
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம் 20, 21

ரோகினி: கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் செய்ய தயங்காத ரோகினி நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் ராசியாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் பலமாக இருக்கிறார். தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பண உதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும் வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 02, 03
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம் 21, 22

ம்ருகசீரிஷம் - 1, 2: மற்றவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ளும் குணமுடைய ம்ருகசீரிஷ நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் புதன் நட்பு வீட்டில் சஞ்சரிக்கிறார். பொறுப்புகள் அதிகரிக்கும். சூரியன் சஞ்சாரத்தால் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். மாணவர்களுக்கு நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கிவர வாழ்வு வளம் பெறும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 03, 04
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம் 22, 23

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar