Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கடகம்: தை ராசி பலன் கடகம்: தை ராசி பலன் கன்னி: தை ராசி பலன் கன்னி: தை ராசி பலன்
முதல் பக்கம் » வைகாசி மாத பலன் (15.5.2022 முதல் 14.6.2022 வரை)
சிம்மம்: தை ராசி பலன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
12:10

மகம்: சொந்த முயற்சியாலும், மனதுணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மக நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 6ல் இருப்பதால் மனதடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும்.
சந்திராஷ்டமம் : பிப். 5, 6
அதிர்ஷ்ட நாள் : ஜன. 25, 26

பூரம்: இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய பூர நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் பொன் பொருள் சேர்க்கை வரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பெண்களுக்கு எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஆண்டாள் தாயாரை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.
சந்திராஷ்டமம் : பிப். 6, 7
அதிர்ஷ்ட நாள் : ஜன. 26, 27

உத்திரம் - 1: காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்கும் உத்திர நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நெருக்கடி நிலை அகலும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் திட்டமிடுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து நரசிம்மரை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
சந்திராஷ்டமம் : பிப். 7, 8
அதிர்ஷ்ட நாள் : ஜன. 27, 28

 
மேலும் வைகாசி மாத பலன் (15.5.2022 முதல் 14.6.2022 வரை) »
temple
அசுவினி: கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்கும் உங்களுக்கு இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாய் ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3, 4: குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு இந்த மாதம் உடல் அசதி குறையும். ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: பழகுவதற்கு இனிமையானவரான உங்களுக்கு இந்த மாதம் காரியத் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் ... மேலும்
 
temple
மகம் : எடுத்த முடிவுகளில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் ராசிநாதன் சூர்யன் சஞ்சாரத்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.