பதிவு செய்த நாள்
17
ஜன
2022
05:01
உடுமலை : செல்லப்பம்பாளையம் சன்மத பீடம், காசி பான லிங்கேஸ்வரர் கோவிலில், காமதேனு தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உடுமலை அருகே, செல்லப்பம்பாளையத்தில், காசி பான லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில், மாட்டு பொங்கலையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.காமதேனு தாயார் சன்னதியில், தாயாருக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கால்நடை வளம் பெருக, கோவிலில், பொங்கலிட்டு, பல்வேறு சிறப்பு அலங்கார பூஜைகள், காமதேனு தாயாருக்கு நடத்தப்பட்டது.