யாழி வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த மயிலாப்பூர் மாதவ பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2022 10:04
சென்னை : மயிலாப்பூரில் மாதவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில், அமிர்தவள்ளி தாயாருடன் மாதவ பெருமாள் அருள்பாலிக்கிறார்.
ஆழ்வார்களின் முதலாழ்வார் என அழைக்கப்படும் பேயாழ்வார் பிறப்பிடமாக இக்கோவில் கருதப்படுகிறது.மாதவப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரைத் திருவோணப் பெருவிழா எனும் பிரம்மோற்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான விழா, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை யாழி வாகனத்தில் பெருமாள் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சேஷ வாகன புறப்பாடு நடந்தது. இன்று காலை நாச்சியார் திருக்கோலத்தில் மாதவப் பெருமாள் அருள்பாலிக்கிறார். இரவு அனுமந்த வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் பிரதான நாளான, 30ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. மே 1ம் தேதி காலை, வெண்ணெய்தாழி கண்ணன் கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.மே., 2ம் தேதி காலை தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 3ம் தேதி பன்னிரு வழிபாடு, திருவாய்மொழி, சாற்று மறை நடக்கிறது. 4ம் தேதி முதல் 8ம் தேதிவரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.