திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை ஆவணித்திரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 4ம் திருவிழாவான 29ம் தேதி இரவு 7 மணிக்கு ரிஷபவாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா, விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும் , சுப்பிரமணியர் மரமயில்வாகனத்திலும் வீதிஉலா நடக்கிறது. செப்.9ம் தேதி இரவு 9 மணிக்கு மேல்கருவூர் சித்தர் மானூரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள், முருகன், விநாயகர் ரதவீதிகளில் வீதிஉலா நடக்கிறது. 5ம் தேதி காலை6 மணிக்கு மேல் 7மணிக்ககுள் மானூரில் வைத்து கருவூர் சித்தருக்கு, சுவாமி காட்சி கொடுத்தல் திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.