மயிலாடுதுறை : சேர்ந்தங்குடி அக்ரஹாரத்தில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி அக்ரஹாரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா ஆராதனை கமிட்டி சார்பில் நவராத்திரியை முன்னிட்டு தினமும் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று வருகின்றது. கடந்த 25 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் கலச ஆவாகனத்துடன் பூஜை மற்றும் ஹோமங்கள் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் துவங்கி கணபதி ஹோமம் துர்கா லெஷ்மி சரஸ்வதி மூல மந்திர ஹோமம் தேவி மஹாத்மிய பாராயணம் ஆரம்பம், ஸ்ரீ துர்கா மூல மந்திர ஹோமம், லெஷ்மி கணபதி ஹோமம், லெஷ்மி நரசிம்மர் மூல மந்திர ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மஹாலெஷ்மி மூல மந்திர ஹோமம், உச்சிஷ்ட கணபதி மூல மந்திர ஹோமம், ஹயக்ரீவர் மூல மந்திரஹோமம், ஸ்ரீ சரஸ்வதி மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது. ராகவேந்திரா ஆராதனை கமிட்டி சார்பில் ஏழாம் நாளான நேற்று அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தட்சிணகாளி யாகம் கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. யாகங்களை குருஜி. கிரி செய்து வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம் செய்தனர்.