Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துரோணாச்சாரியார் இல்வலன் இல்வலன்
முதல் பக்கம் » பிரபலங்கள்
இடும்பி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஆக
2012
05:08

வாரணாவதம் செய்த துரியோதனன் அந்த இடத்தில் ஒரு அரக்கு மாளிகை எழுப்பினான். பாண்டவர்கள் ஐவரையும் அங்கு சென்று தங்கும்படி கேட்டுக் கொண்டான். பாண்டவர்கள் ஐவரும் தாய் குந்திதேவியுடன் சென்று அந்த அரக்கு மாளிகையில் தங்கினார்கள். ஆனால், அரக்கு மாளிகையுள் இருப்பதால் ஏற்படப்போகும் ஆபத்தை விதுரர் கூறி எச்சரித்ததும், பாண்டவர்கள் உடனே அரக்கு மாளிகைக்குத் தீ வைத்துவிட்டு சுரங்கப் பாதை வழியாகத் தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் கங்கையைக் கடந்து ஒரு பெரிய வனப்பகுதியை அடைந்தார்கள். அந்தக் காடு இடும்பன் என்ற கொடிய அரக்கன் அரசாட்சி செய்துவரும் வனப்பகுதி என்பது அதன்பிறகே அவர்களுக்குத் தெரிய வந்தது. அரக்கு மாளிகையிலிருந்து தப்பி வெகு தூரம் நடந்து பயணம் வந்ததால் பாண்டவர்களும் குந்தி தேவியும் மிகவும் களைத்துப்போய் விட்டார்கள். அவர்களுக்குத் தாகமாக இருந்தது. அருகில் எங்காவது நீர் நிலை இருந்தால் தண்ணீர் எடுத்து வருகிறேன் என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டான் பீமன். அப்போது மாலை மங்கி இரவுப்பொழுது தொடங்கப்போகும் வேளை.

இடும்பன் இருந்த குகை அருகில் பீமன் சென்றபோது, ஏது, ஏதோ மனித வாடை அடிக்கிறதோ! என்று உணர்ந்தான் அரக்கன் இடும்பன். அவன் சகோதரி இடும்பி. அவளை அழைத்து, இடும்பி ஏதோ மனித வாடை வருகிறது. யாரோ எதிரிகள் நம் வனத்திற்குள் வந்துள்ளார்கள். அவர்களை விட்டுவைப்பது ஆபத்து. நீ உடனே சென்று அவர்களைக் கொன்றுவிட்டு வா ! என்றான் இடும்பன். வலிமை மிக்கவளான இடும்பி, தன் சகோதரன் இட்ட கட்டளையை நிறைவேற்ற குகையிலிருந்து வெளிப்பட்டாள். இயல்பில் அகோரமான வடிவமும், பயங்கரமான நகங்களும் பற்களும் கொண்ட இடும்பி, ஒரு அழகான மானுடப் பெண் போலத் தோற்றம் எடுத்தாள். காரணம், விரும்பிய வடிவத்தை எடுக்கக் கூடிய வரத்தை பெற்றிருந்தாள், அவள். மனிதப் பெண்ணாக வடிவம் எடுத்த அவள், வனத்திற்குள் வந்திருக்கும் புதியவர்களை அணுகி, அவர்கள் யார் என்பதை விசாரித்து அறிந்து கொண்டு, அவர்களைக் கொன்றுவிடவேண்டும் என்று எண்ணினாள். வனத்தில் நடந்து சென்றாள். வழக்கமாக அவள் நடந்தால் பூமி அதிரும்; மரங்கள் நடுங்கும். ஆனால், இப்போது அழகியாக அவள் உருவெடுத்திருப்பதால், அன்ன நடை நடந்து வந்தாள். தண்ணீர் கொண்டு வருவதற்காக போய்க் கொண்டிருந்த பீமனைக் கண்டாள். அவனுடைய அழகு, கம்பீரமான உருவம் எல்லாம் அவளைக் கவர்ந்தன. அவனைக் கொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. மாறாக, அவன் மீது அவளுக்குக் காதல் பிறந்தது. பீமனிடம் சென்று நீ யார்? என்று விசாரித்தாள்.

என்னைத் திருமணம் செய்து கொள்! என்று கேட்டாள். பீமன் மறுத்தான். இடும்பி அவனை விடவில்லை. தொடர்ந்து சென்று வற்புறுத்தினாள். இடும்பி ஏன் இன்னமும் திரும்பி வரவில்லை? என்று யோசித்தான் இடும்பன். அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று அஞ்சினான். உடனே குகையிலிருந்து வெளிப்பட்டான் வனமெங்கும் இடும்பியைத் தேடினான். ஓரிடத்தில் அவள் பீமனுடன் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவளது மனம் பீமனை விரும்புகிறது என்பதைப் புரிந்து கொண்டான். உடனே சினம் கொண்டு கர்ஜிக்கலானான். அதைக் கண்டு இடும்பி நடுங்கினாள். பீமனைத் தாக்கப் பாய்ந்தான், இடும்பன். இருவருக்கும் கடும் சண்டை. இருவருடைய கர்ஜனையும் அந்தக் காட்டையே அதிர வைத்தது. குந்தியும் பாண்டவர்கள் நால்வரும் அங்கே விரைந்து வந்தனர். இடும்பன், பீமன் சண்டையின் இறுதியில் இடும்பன் மாண்டான்; பீமன் வென்றான். இடும்பி வருந்தி அழுதாள். தனக்கு ஒரே ஆதரவாக இருந்த தன் சகோதரனும் இறந்த பின்பு, தான் நிராதரவாக நிற்பதாகக் கூறி இடும்பி அழுது புலம்பினாள். தன் நிலைக்கு இரங்கி பீமனே தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்றாள். குந்தியும் தர்மபுத்திரரும் அதை ஏற்றுக் கொண்டார்கள். பீமனுக்கும் இடும்பிக்கும் இடும்பவனம் எனப்படும் அந்தக் காட்டிலேயே திருமணம் நடந்தது. ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் உன்னோடு வாழ்வேன் என்றான் பீமன். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். பிறக்கும் போதே பலசாலியாகப் பிறந்த அந்தப் புதல்வன் தான் பின்னாளில் பாரதப் போரில் வீரச் செயல்கள் புரிந்த கடோத்கஜன் ஆவான். கடோத்கஜன் பிறந்த பின் இடும்பியை வனத்திலேயே விட்டுவிட்டுப் பிரிந்து சென்றான் பீமன்.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar