கார்த்திகை 1ம் தேதி : சபரிமலைக்கு விரதம் துவக்க தயாராகும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2022 08:11
நாகர்கோவில்: சபரிமலைக்கு விரதம் இருந்து ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் தயாராகிவரும் நிலையில் பக்தர்கள் அணியும் துளசிமாலை மற்றும் கறுப்பு நிறவேஷ்டி விற்பனை தொடங்கியது. ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள், கார்த்திகை 1ம்தேதி ஆரம்பித்து தை மாதம் 1ம் தேதி அன்று மகர ஜோதி தரிசனத்தை காணும் வரையிலும் கடுமையான விரதத்தை கடைபிடிப்பார்கள்.
அதுதான் ஐயப்பனுக்கு விரதம் இருப்பதிலேயே மிகச்சிறந்த விரதமாகும். சுத்தமான துளசிச்செடியில் உள்ள கட்டையில் இருந்து செய்யப்பட்ட துளசி மணிகளைத்தான், சபரிமலை ஐயப்பன் மாலை யாக அணிந்து,‘துளசி மணி மார்பனாக’ அமர்ந்திருக்கிறார். இதனால்தான் பவித்ரமான பக்தியோடு இருக்கும் ஐயப்ப பக்தர்களும் துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் வழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இல்லாததால் சபரிமலைக்கு விரதம்இருந்து ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் தயாராகிவரும் நிலையில் பக்தர்கள் அணியும் துளசி மணிமாலை மற்றும் கறுப்பு, காவி நிற வேஷ்டி, சட்டை மற்றும் துண்டு போன்ற விற்பனை தொடங்கியது.