சபரிமலையில் மகரவிளக்கு கால நெய் அபிஷேகம் தொடக்கம் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2023 10:01
சபரிமலை, சபரிமலையில் மகரவிளக்கு கால நெய் அபிஷேகம் நேற்று அதிகாலை தொடங்கியது. நடை திறந்தது முதல் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. மரக்கூட்டம் வரை கியூ காணப்படுகிறது. சபரிமலையில் ஜன., 14ல் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3:30 மணிக்கு நெய்யபிேஷகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைத்தனார். பின்னர் கணபதி ேஹாமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கியது.
நேற்று முன்தினம் மாலை தொடங்கிய கூட்டம் நேற்று இரவிலும் தொடர்ந்தது. பக்தர்கள் மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வழியாக மட்டுமே அனுப்பப்படுகின்றனர். நான்கு முதல் ஐந்து மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் 18-ம் படியில் ஏறுகின்றனர். பெரியநடைப்பந்தலில் முதியவர்கள் மற்றும் சிறுவயதினர் தனி கியூவில் நிறுத்தப்பட்டு அதிக காத்திருப்பு இல்லாமல் படியேற அனுப்பப்படுகின்றனர். பம்பையில் தண்ணீரின் ஓட்டத்தை அதிகரிக்கும் வகையில் குள்ளாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. நதியில் சீரான இடைவெளியில் குளோரினேஷன் செய்யவும், பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது, மழை குறைந்துள்ளதால் பம்பையில் தண்ணீர் ஓட்டம் குறைந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. சபரிமலைக்கான ஆன்லைன் முன்பதிவு மகரவிளக்கு தினமான ஜன.,14- வரை கிட்டத்தட்ட நிறைவு பெற்ற்றுள்ளது. ஜன., ௮ம் தேதி வரை 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ௯ முதல் 12-ம் தேதி வரை 45 முதல் 55 சதவீதம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மகரஜோதி தினமான ஜன.,1௪க்கான முன்பதிவு முடியும் தருவாயில் உள்ளது. ஜன.,15 முதல் 19- வரை குறைந்த எண்ணிகையில் தான் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.