காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜம்மு - காஷ்மீர் மாநில ஆளுநர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 04:01
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் பஞ்சபூத லிங்ககளில் வாயுலிங்கேஸ்வரராகவும் சுயம்புவாகவும் வீற்றிருக்கும் திவ்யஷேத்திரம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் .தென் இந்தியாவில் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த ராகு கேது பூஜைகள் மற்றும் அபிஷேகங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசியல் வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்ய வருவதோடு இத்தலத்தில் நடைபெறும் அபிஷேகங்கள் மற்றும் ராகு கேது பூஜையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் நேற்று சனிக்கிழமை ஜம்மு - காஷ்மீர் மாநில (கவர்னர் ) ஆளுநர் மனோஜ் சின்னா குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலூ மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஸ்ரீகாளஹஸ்தி கோட்டாச்சியர் ஆர்டிஓ ராமாராவ் மற்றும் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் .கோயிலுக்குள் சென்றவர்கள் கோயிலில் நடைபெறும் மகன்யாச பூர்வக ஏகாதசி ருத்ர அபிஷேகத்தில் ஈடுபட்டார் . அபிஷேகத்தைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் சிறப்பு ஆசிர்வாதம் செய்யப்பட்டதோடு சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களை வழங்கினார்.