ஈரோடு வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 04:01
ஈரோடு : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மணிக்கூண்டு பகுதியில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடை பெற்றது. அதிகாலை 4மணிமுதல் 5மணி வரை ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ கஸ்தூரி அரங்கநாத பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.பின்பு எம்பெருமானுக்கு திவ்ய பிரபந்த சாற்று முறை, தொடர்ந்து பரமபத வாசல் திறக்கபட்டது. முத்தங்கி சேவையில் சர்வதரிசனம் நடை பெற்றது.நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியில் இருந்து 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.