பதிவு செய்த நாள்
02
ஜன
2023
04:01
குன்னூர்: குன்னூர், கேத்தி அருகே கொல்லிமலை கிராமத்தில், கோத்தர் பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்துடன் கோவில் திறப்பு விழா நடந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி அருகே கொல்லிமலை, கோத்தகிரியில் திருச்சிகடி, உட்பட 7 கிராமங்களில் கோத்தர் பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் கம்பட்ராயர் திருவிழா எனும் ஐயனோர் அம்னோர் திருவிழா கொண்டாடுகின்றனர். டிச., ஜனவரி மாதங்களில் ஒரு வாரம் நடக்கும் இந்த திருவிழாவில், இதில், கோத்தர் மக்கள், தங்களது பாரம்பரிய வெள்ளை உடை அணிந்து, பரம்பரிய இசைக்கேற்ப நடனமாடி வருகின்றனர். ஐயனோர், அம்னோர் தெய்வங்களை வழிபடுகின்றனர். .கடைசி 3 நாட்களில் வீட்டிற்கு செல்லாமல் கோவிலில் தங்கி பூஜைகள் செய்கின்றனர். கொல்லிமலையில், கோவில் திறப்பு விழா பாரம்பரிய வழிபாடுகளுடன், பழங்குடியின மகளிர் நடனமாடினர். கொட்டும் பளி குளிரிலும் விழாவை கொண்டாடினர்.