பதிவு செய்த நாள்
29
ஜன
2023
08:01
பழநி: பழநி, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், தைப்பூச திருவிழாவின் முதல் நிகழ்வாக காலை 10:17 மணிக்கு கொடி கட்டி மண்டபத்தில் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சூரியன், சந்திரன், சேவல், மயில், வேல் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
ஜன.30 ல் காலையில் வள்ளி தெய்வசேனா முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் திருவீதி உலா நடைபெறும்.இரவு 7:30 மணிக்கு வெள்ளி ஆட்டுகிடா வாகனத்தில் ரதவீதி உலா நடக்கும். கலைநிகழ்ச்சிகள், மலைக் கோயில், அடிவாரம், குடமுழுக்கு நினைவரங்கத்தில், பக்தி சொற்பொழிவு பக்தி இன்னிசை நடைபெறும். தைப்பூச திருவிழா உற்சவத்தில் ஆறாம் நாளான பிப்.3ல் இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு ரத வீதியில் நடைபெறும். வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க குதிரை, தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு சுவாமி புறப்பாடு நடைபெறும்.
தைப்பூசம் அன்று பிப்.4., அன்று மதியம் 11:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளால் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து, ரத வீதியில் தேரோட்டம் நடைபெறும். பிப்.7 அன்று மாலை 7:00 மணிக்கு தெப்ப தேர் திருவிழா நடைபெறும். இரவு கொடி இறக்குதல் நடைபெற்று தைப்பூச உற்சவம் நிறைவு பெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், கந்தவிலாஸ் நிறுவன செல்வக்குமார், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.