Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : மாசி மாத பலன் கன்னி : மாசி மாத பலன் கன்னி : மாசி மாத பலன்
முதல் பக்கம் » புரட்டாசி ராசி பலன் (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
சிம்மம் : மாசி மாத பலன்
எழுத்தின் அளவு:
சிம்மம் : மாசி மாத பலன்

பதிவு செய்த நாள்

12 பிப்
2023
11:02

மகம்: எதிலும் அச்சப்படாமல் முடிவெடுக்கும் மகம் நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் சூரியன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். எதிர்பார்த்த மாற்றங்கள் வரும். வீண் செலவு குறையும். தனவாக்கு ஸ்தானம் மிக வலுவாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். காரியங்களில் இருந்த தாமதம் அகலும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் அமர அவர் உங்கள் ராசியைப் பார்க்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் வேகம் உண்டாகலாம். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. நண்பர், உறவினரிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் சேரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

பரிகாரம்: வாராகியை வழிபட வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

சந்திராஷ்டமம்: பிப். 21, 22

அதிர்ஷ்ட தினம்: பிப். 14, 15

பூரம்: வேதனையும் சாதனையாக மாற்றும் திறன் படைத்த பூரம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் சுக்கிரன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்தாலும் உச்சமாக இருப்பது சிறப்பு. ராசிநாதன் சூரியன் ராசியைப் பார்ப்பதால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோள் அற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுபச்செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மிக யாத்திரைகள் சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். உத்யோக ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். குடும்பம் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கைகூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணனை வணங்க பிரச்னைகள்  தீரும்.

சந்திராஷ்டமம்: பிப். 23

அதிர்ஷ்ட தினம்: பிப். 15, 16

உத்திரம் - 1: எடுத்த முடிவில் ஸ்திரமாக இருக்கும் உத்திரம் நட்சத்திரஅன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் ராசிநாதன் சூரியன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். எடுக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பம் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்கள் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். கலைத்துறையினர் தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட துார தகவல்கள் நல்லவையாக இருக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

சந்திராஷ்டமம்: பிப். 24

அதிர்ஷ்ட தினம்: பிப். 16, 17

 
மேலும் புரட்டாசி ராசி பலன் (17.9.2024 முதல் 17.10.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: எடுக்கும் முயற்சி எதுவாக இருப்பினும் அதில் வெற்றிகண்டு வரும் உங்களுக்கு, இந்த மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம் ; எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் திறமை படைத்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; வாழ்வில் குறிக்கோள் எது என்பதை தெரிந்து கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்;  தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் பொன்னான ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்; மற்றவருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar