Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : மாசி மாத பலன் துலாம் : மாசி மாத பலன் துலாம் : மாசி மாத பலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
கன்னி : மாசி மாத பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி : மாசி மாத பலன்

பதிவு செய்த நாள்

12 பிப்
2023
11:02

உத்திரம் - 2, 3, 4: எதிலும் தெளிவாக முடிவெடுக்கும் உத்திரம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் தந்திரசாலி. பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த மாதம் ராசிநாதனும் தொழில் ஸ்தானாதிபதியுமாகிய புதன் சுகஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும் என்ற கவலை வேண்டாம். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள் வரவு அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். பெண்கள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். சூரியனின் ரண ருண ஸ்தான சஞ்சாரத்தால் அரசியல்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.

பரிகாரம்: சரஸ்வதியை வணங்கி வர நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 24

அதிர்ஷ்ட தினம்: பிப். 16, 17

அஸ்தம்: எல்லோரையும் வசீகரிக்கும் இயல்பு கொண்ட அஸ்தம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் ராசியை குருவும் சுக்கிரனும் பார்ப்பதால் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். ஆறாமிடத்தில் இருக்கும் கிரக கூட்டணியால்  உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். தன்னம்பிக்கை மிக்க மனிதராக செயல்படுவீர்கள். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேர வாய்ப்புண்டு. கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பல தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புண்டு. செயல்திறன் அதிகரிக்கும். எந்த காரியத்தையும் திறமுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பெண்கள் எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக் கூடும். கலைத்துறையினர் மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். அரசியல்வாதிகள் லாபகரமான காலமாக அமையும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் மாணவர்கள் கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: முருகனை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

சந்திராஷ்டமம்: பிப். 25

அதிர்ஷ்ட தினம்: பிப். 17, 18

சித்திரை - 1, 2: திட்டமிட்ட அணுகுமுறையினால் எந்த செயலிலும் வெற்றி பெறும் சித்திரை நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் செவ்வாயின் சஞ்சாரம் சுயசாரம் பெற்று இருப்பதால் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். மனதில் தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். தொழில் ஸ்தானம் வலுவாக இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குறிப்பிட்ட நேரத்தையும் கடந்து உழைத்து சில பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்னைகள் தலை துாக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பெண்கள் மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரவு கூடும். கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வர வேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். எப்போதும் உற்சாகமான மனநிலையுடன் இருப்பர்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டமம்: பிப். 26

அதிர்ஷ்ட தினம்: பிப். 18, 19

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar