Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : மாசி மாத பலன் விருச்சிகம் : மாசி மாத பலன் விருச்சிகம் : மாசி மாத பலன்
முதல் பக்கம் » புரட்டாசி ராசி பலன் (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
துலாம் : மாசி மாத பலன்
எழுத்தின் அளவு:
துலாம் : மாசி மாத பலன்

பதிவு செய்த நாள்

12 பிப்
2023
11:02

சித்திரை - 3, 4: தாங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடைய சித்திரை நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திர நாதன் செவ்வாயின் பார்வையினால் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். ராசிநாதன் சுக்கிரனின் ஸ்தான பலத்தால் தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு உயர் பதவிகளும் கிடைக்க வாய்ப்புண்டு. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். எல்லா வகையிலும் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பெறுவதில் கவனம் தேவை. சீரான லாபம் உண்டாகும். சூரியனின் பஞ்சம ஸ்தான பலத்தால் அரசியல்துறையினர் பதவி உயர்வு பெற்று மகிழ்வர். புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் மத்தியில் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: சிவனை வணங்க குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
சந்திராஷ்டமம்: பிப். 26

அதிர்ஷ்ட தினம்: பிப். 18, 19

சுவாதி: வைராக்கிய குணம் அதிகம் கொண்ட சுவாதி நட்சத்திர அன்பர்களே, நீங்கள் விடா முயற்சியுடைவர். இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் வலுவான சஞ்சாரத்தால் எதிலும் நன்மைகளே நடக்கும். பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும்.  காரியங்களில் தாமதம் உண்டாகலாம். தொழில், வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. உங்களின் கவனக்குறைவால் மேலதிகாரிகளிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். குடும்பம் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அயன சயன போக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வெளியூர் பயணங்கள் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பெண்கள் எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் நீண்டநாட்களாக இருந்த மனஅழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். மாணவர்கள் கல்வியில் இருக்கும் மந்தநிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.

பரிகாரம்: ராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 27, 28

அதிர்ஷ்ட தினம்: பிப். 19, 20

விசாகம் - 1, 2, 3: பழகுவதற்கு இனிமையான குணம் கொண்ட விசாகம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் குருவின் சஞ்சாரத்தால் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரவு எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தொழில். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. சக பணியாளர்களின் வேலைகளில் உங்கள் உதவி தேவைப்படும் சூழல் உருவாகலாம். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். பெண்களின் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். திட்டமிடுதல், புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டால் லாபமான காலமாக அமையக் கூடிய வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வழிபட துன்பம் தீரும். கவலை அகலும்.

சந்திராஷ்டமம்: பிப். 28; மார்ச் 01

அதிர்ஷ்ட தினம்: பிப். 20, 21

 
மேலும் புரட்டாசி ராசி பலன் (17.9.2024 முதல் 17.10.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: எடுக்கும் முயற்சி எதுவாக இருப்பினும் அதில் வெற்றிகண்டு வரும் உங்களுக்கு, இந்த மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம் ; எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் திறமை படைத்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; வாழ்வில் குறிக்கோள் எது என்பதை தெரிந்து கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்;  தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் பொன்னான ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்; மற்றவருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar