Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : மாசி மாத பலன் தனுசு : மாசி மாத பலன் தனுசு : மாசி மாத பலன்
முதல் பக்கம் » புரட்டாசி ராசி பலன் (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
விருச்சிகம் : மாசி மாத பலன்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : மாசி மாத பலன்

பதிவு செய்த நாள்

12 பிப்
2023
11:02

விசாகம் - 4: தீர்க்கமான எண்ணம் கொண்ட விசாகம் நக்ஷத்திர அன்பர்களே, இந்த மாதம் ராசியை நட்சத்திரநாதன் குரு பார்ப்பதால் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புதனின் தைரிய ஸ்தான சஞ்சாரத்தால் புத்திசாதுாரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரவுதாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரவுதாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை துாக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். கலைத்துறையினருக்கு தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். அரசியல்துறையினர் நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரவுதிருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.
சந்திராஷ்டமம்: பிப். 28; மார்ச் 01

அதிர்ஷ்ட தினம்: பிப். 21, 22

அனுஷம்: அடுத்தவரது கருத்தையும் மதிக்கும் அனுஷ நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் சுபச்செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மைகள் ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கைகூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானம் வலுவாக அமைந்திருக்கிறது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். கவலை வேண்டாம். எதிர்கால முன்னேற்றதிற்கு இவை படிக்கல்லாக இருக்கும். குடும்பத்தினர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக முக்கிய பொறுப்புக்கள் ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் கடும் உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மை பெற வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு வரும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பர்.  ஆசிரியர்களிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டல் கடன் பிரச்னை குறையும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 1, 2

அதிர்ஷ்ட தினம்: பிப். 23

கேட்டை: துடிப்புடன் செயலாற்றும் கேட்டை நட்சத்திர அன்பர்களே, நீங்கள் ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமுடையவர். இந்த மாதம் தனாதிபதி குருவின் சஞ்சாரத்தால் பணவரவு அதிகரிக்கும். மனக்குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு விலகும். பயணங்கள் மூலம் ஓரளவு நன்மை கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதுாரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். சீரான லாபம் கிடைக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். உங்கள் மதிநுட்ப செயல்திறனால் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்து இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பெண்களுக்கு குடும்பத்தினரின் செயல்பாடு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் வழிகாட்டுதலின்படி நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டால் நன்மை சேரும். குறைகள் நீங்கும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 2, 3

அதிர்ஷ்ட தினம்: பிப். 24

 
மேலும் புரட்டாசி ராசி பலன் (17.9.2024 முதல் 17.10.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: எடுக்கும் முயற்சி எதுவாக இருப்பினும் அதில் வெற்றிகண்டு வரும் உங்களுக்கு, இந்த மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம் ; எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் திறமை படைத்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; வாழ்வில் குறிக்கோள் எது என்பதை தெரிந்து கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்;  தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் பொன்னான ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்; மற்றவருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar