Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : மாசி மாத பலன் கும்பம் : மாசி மாத பலன் கும்பம் : மாசி மாத பலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மகரம் : மாசி மாத பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம் : மாசி மாத பலன்

பதிவு செய்த நாள்

13 பிப்
2023
12:02

உத்திராடம் - 2, 3, 4: புதுமையான சிந்தனை உடைய உத்திராடம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. செவ்வாயின் சஞ்சாரத்தால் திடீரென கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்களின் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். அதே வேளையில் பஞ்சமாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் பரபரப்பால் அமைதி குறைவது போல் தோன்றும். சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்னை தலைதுாக்கலாம். பிள்ளைகளின் மூலம் பெருமை கிடைக்கும். மனதிற்கு விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். பெண்கள் வீண்பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

பரிகாரம்: நந்தியம்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 5, 6

அதிர்ஷ்ட தினம்: பிப். 26

திருவோணம்: நாடி வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் திருவோண நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் தனவாக்கு ஸ்தானம் வலுவாக அமைந்திருப்பதால் பணத்தேவை பூர்த்தியாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டுத்தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நீண்ட துாரப் பயணங்களால் நன்மை காண்பீ்ர்கள். குடும்பத்தினருடன் வீண்வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. அண்டை வீட்டாரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.  பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும். தோழிகளுடன் விட்டுக்கொடுத்து பழகுவது நல்லது. கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழிபிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சுக ஸ்தானத்தில் ராகு அமைந்திருப்பதால் மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்து போவது நல்லது.

பரிகாரம்: விநாயகரை வழிபட வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 6

அதிர்ஷ்ட தினம்: பிப். 27, 28

அவிட்டம் - 1, 2: மனோ தைரியம் அதிகம் கொண்ட அவிட்டம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரவு கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்னைகள் தீரும். மறைமுகப் போட்டிகள் குறையும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டியிருக்கும். வாக்குவன்மையால் நன்மைகள் காண்பீ்ர்கள். குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் குடும்பம் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வருவர். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். அரசியல்வாதிகளுக்கு  சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம். மாணவர்கள் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: அனுமனை வழிபட மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 7

அதிர்ஷ்ட தினம்: பிப். 28; மார்ச் 1

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar