Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : மாசி மாத பலன் மீனம் : மாசி மாத பலன் மீனம் : மாசி மாத பலன்
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை)
கும்பம் : மாசி மாத பலன்
எழுத்தின் அளவு:
கும்பம் : மாசி மாத பலன்

பதிவு செய்த நாள்

13 பிப்
2023
12:02

அவிட்டம் - 3, 4: தயாள குணமும் கொண்ட அவிட்ட நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் ராசியில் அருமையான கிரக கூட்டணி அமைந்திருக்கிறது. இதனால் மனதில் இருந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். விரும்பியபடி காரியங்கள் நடக்கும். நீண்ட துார தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். ரசிகர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வாய்ப்புகள் தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மற்றவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு புதனின் சஞ்சாரத்தால் தேர்வு முடிவு பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்க மன அமைதி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 7

அதிர்ஷ்ட தினம்: பிப். 28; மார்ச் 1

சதயம்: எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் இயல்பு உடைய சதயம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் கற்பனை வளமும் கலையார்வமும் மிக்கவர்கள். இந்த மாதம் ராசியில் அமைய உள்ள கிரக சேர்க்கையால் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுக ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாயாலும், ராசியில் இருக்கும் சூரியனாலும் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பணவரவு குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம் போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணத்தேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகள்  தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினர் தொழில் தொடர்பாக வீண் அலைச்சலைச் சந்திப்பர்.  புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.

பரிகாரம்:  அம்மனை வணங்கி வர கவலை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 8

அதிர்ஷ்ட தினம்: மார்ச் 1, 2

பூரட்டாதி - 1, 2, 3: தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே நீங்கள் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் வல்லவர். இந்த மாதம் நட்பு கிரகமான சூரியன் ராசியில் இருப்பதால் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகலாம். உரிய சிகிச்சையை மேற்கொண்டால் உடல் நலம் பெறும். பூர்வீகச் சொத்துக்களும் அதனால் வரக்கூடிய லாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும்.  கணவன், மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். வளர்ச்சிக்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். தொழில் ஸ்தானத்தை செவ்வாயும் குருவும் பார்ப்பதால் தொழிலதிபர்கள் அதிக பொருளாதார வரவுகளை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் அரசு, தனியார் துறைகளில் உள்ளவர்களும் இது வரை இருந்த ஆடம்பர செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொழில் மேன்மை பெறுவார்கள். கலைஞர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவார்கள். அரசியல்வாதிகள் நற்செயல்களில் ஈடுபட்டு உயர்வைப் பெற்று புகழுடன் இருப்பர்.  தொண்டர்களின் வளர்ச்சிக்கும் துணைநிற்பர்.   மாணவர்களுக்கு தேவையான பொருளாதார வசதி தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.

பரிகாரம்:  செவ்வாய் தோறும் முருகனை வழிபட நன்மை கூடும்.  
சந்திராஷ்டமம்: மார்ச் 9
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 2, 3

 
மேலும் வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் ... மேலும்
 
temple news
ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், ... மேலும்
 
temple news
மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar