பதிவு செய்த நாள்
01
மே
2023
06:05
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் இன்று நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை, ஆராதனம், புண்யா வசனம், கலச ஆவாகனம் ஆகியவை நடந்தன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அரங்கநாத பெருமாள் வெள்ளி சிம்மாசனத்தில், மேளதாளம் முழங்க, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து உச்சக்கால பூஜை, சற்று முறை வைபவம் நடந்தது. இதில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சர்கள், மிராசுதாரர்கள், செயல் அலுவலர், கோவில் ஊழியர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.