பதிவு செய்த நாள்
03
மே
2023
09:05
திருவண்ணாமலை: சித்திரை மாத பவுர்ணமியில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சிவனாக நினைத்து வழிபடும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட மலையை வலம் வந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர். இதில், கார்த்திகை தீப திருவிழா மற்றும் சித்திரை மாத, சித்ரா பவுர்ணமி தினத்தன்று, வழக்கத்தைவிட பக்தர்கள் கூடுதலாக வருவர். இம்மாத சித்திரையில் வரும் சித்ரா பவுர்ணமி திதி, நாளை, 4ம் தேதி இரவு,11:59 முதல், மறுநாள், 5ம் தேதி இரவு, 11:33 மணிவரை உள்ளது. இந்த நேரத்தில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.